ஜீவானந்தத்தை பற்றி தெரிந்துக் கொள்வதற்காக புதிய ரூட் போட்ட குணசேகரன்.! கண்டுபிடிப்பாரா ஜனனி.? எதிர்நீச்சல் சீரியல் இன்றைய ப்ரோமோ

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் டிஆர்பி முன்னணி வகித்து வருகிறது. அப்படி அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் என்ட்ரி கொடுத்து குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அதாவது தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனனி மற்றும் குணசேகரன் ஆளுக்கு ஒரு புறம் விசாரித்து வருகின்றனர். எனவே இதன் மூலம் இவர்கள் கண்டுபிடிப்பார்களா என்பது குறித்து அனைவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் கெத்தாக இருந்த ஆதி குணசேகரனை ஆட்டம் காண வைத்துள்ளார் ஜீவானந்தம். அப்பத்தாவின் 40% சொத்தை எப்படியாவது ஆட்டையை போட்டு விட வேண்டும் என குணசேகரன் நினைத்து வந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஜீவானந்தம் மொத்த சொத்தையும் தன்னுடைய பெயரில் எழுதியுள்ளார்.

இது குறித்து குணசேகரன் குடும்பத்தினர்களுக்கு தெரிய வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படி நெஞ்சடைப்பு ஏற்பட்டு, ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவானந்தம் தற்பொழுது தான் குணமடைந்த வீட்டிற்கு வந்துள்ளார். ஜனனி ஜீவானந்ததிடம் இருந்து சொத்துக்களை வாங்கி தருகிறேன் எனக்கூறி நிலையில் ஜீவானந்தத்துடன் மோத வேண்டும் என்றால் அவர் பேக்ரவுண்ட் என்னென்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறாள்.

எனவே அதற்காக பெண் ஒருவரை சந்தித்து ஜீவானந்தம் யார் என கூறி பேசிக்கொண்டிருக்க அதேபோல் மறுபுறம் குணசேகரன் தன்னுடைய கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டி அந்த ஜீவானந்தம் யார் என்று தெரிந்து கொள்ள சென்னைக்கு கிளம்பியுள்ளார் இது குறித்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவுள்ளது.