Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. மேலும் டுவிஸ்ட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதனால் அடுத்தடுத்து என்னதான் நடக்கும் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது
அந்த வகையில் தற்பொழுது ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் குணசேகரனை ஆட்டிப்படைத்து வருகிறார். குணசேகரன் ஒருபுறம் கதற மறுபுறம் ஜனனி யார் இந்த குணசேகரன் என்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அப்பத்தா எழுந்தால் மட்டுமே அனைத்துக்கும் விடை தெரியும் என ஜனனி அப்பத்தாவை எழுந்திருக்க சொல்லி படாத பாடு படுத்துகிறார்.
இந்நிலையில் ஜெனனி ஜீவானந்தத்தின் தற்பொழுது புகைப்படத்தை எடுத்து வீட்டில் இருக்கும் மருமகளிடம் காமிக்க எல்லாரும் யார் இவர் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுதுதான் குணசேகரனுக்கு அவருடைய சொத்து மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தெரிய வர இருக்கிறது.
அதாவது, குணசேகரன் மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் இருவரும் ஒரே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு காதல் மலர்ந்து உள்ளது. ஆனால் சில காரணங்களால் ஈஸ்வரி, ஜீவானந்தம் பிரிந்து விடுகின்றனர். எனவே வேறு வழியில்லாமல் ஈஸ்வரி குணசேகரனை திருமணம் செய்து கொள்ளும் நிலையில் அதற்கான பிளாஷ் பேக் காட்சிகள் இனி எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இவ்வாறு ஏற்கனவே சொத்துக்கள் போயிருக்கும் நிலையில் குணசேகரன் கதி கலங்கி நிற்கிறார். இவ்வாறு ஈஸ்வரியின் முன்னாள் காதலன் ஜீவானந்தம் தான் என்று குணசேகரனுக்கு தெரிய வந்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். இப்பொழுது ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்தின் புகைப்படத்தை பார்த்தவுடன் யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவருடைய தோற்றம் முழுவதாக மாறி இருக்கும் நிலையில் இதனைப் பார்த்து கண்டறிய முடியவில்லை எனவே இனிவரும் எபிசோடுகளில் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள இருக்கிறார்.