ஒட்டுமொத்த மக்களையும் தட்டி தூக்க எதிர்நீச்சல் சீரியல் குழு செய்த பலே ஐடியா.! குணசேகரின் ஆட்டம் இனி தான் ஆரம்பம்..

ethirneechal : சன் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி டிஆர்பியிலும் முதலிடத்தை பிடித்து வரும் நிலையில் தற்பொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சீரியல் குழு சுவாரசியமான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரன், ஜனனி கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தனது மனைவி மற்றும் தம்பிகளின் மனைவிகளை அடிமையாக நடத்தி வரும் ஆதி குணசேகரனை எதிர்த்து போராடி சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக மருமகள்கள் போராடி வருகின்றனர்.

அப்படி ஆண் ஆதிக்கம் இருக்கும் குடும்பத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தி வரும் நிலையில் இது போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்து அனைவரும் போராடி வெளியே வரவேண்டும் என்பதனை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதனால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் ஆதிரையை கட்டாயப்படுத்தி கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கும் நிலையில் இதனை அடுத்து எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து வருகிறார். அதேபோல் அப்பத்தாவிடம் கைரேகையை வாங்கியது குணசேகரன் தான் என ஜனனி தவறாக நினைத்து வரும் நிலையில் இதற்கிடையில் ஜீவானந்தம் மிகப்பெரிய டூரிஸ்ட் வைத்துள்ளார்.

ஜனனி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டும் கௌதம் இதுவரையிலும் ஜீவானந்தத்திடம் கூறாமல் இருந்து வருவது சந்தேகமாக இருந்து வருகிறது. இவ்வாறு பரபரப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சூப்பர் நியூஸ் வெளியாகி உள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இனி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.