Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து எதிர்பாராத திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அப்பத்தாவின் 40% சொத்தை எப்படியாவது ஜீவானந்தத்திடம் இருந்து பிடுங்கி விட வேண்டும் என குணசேகரன் திட்டம் போட்டு இருக்கிறார்.
எனவே சென்னைக்கு சென்று ஆட்களை வைத்து ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். அதேபோல் சக்தி, ஜனனி ஒரு புறம் ஜீவானந்தத்தை பற்றி தேடிக் கொண்டிருக்க மற்ற மருமகள்களும் தங்களால் முடிந்த வரை தேடி வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் பெண்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக குணசேகரன் கை வராதது போல் நடித்து வருகிறார். மறுபுறம் ஆதிரையை யாரும் கண்டுக்காமல் இருந்து வரும் நிலையில் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அருணை தேடி அவருடைய வீட்டிற்கு ஆதிரை செல்கிறார். ஆனால் அருண் ஆதிரை என்ற பெண் என்னுடைய வாழ்க்கையில் கிடையாது என அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்து விடுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தத்திற்கு தனது காதலி ஈஸ்வரி தான் குணசேகரன் மனைவி என்பது தெரியவந்துள்ளது. அதாவது, ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு போன் போட்டு நான் குணசேகரன் மனைவி பேசுகிறேன் என சொல்ல அதற்கு ஜீவானந்தம் நீங்க ஈஸ்வரி என்பதனால் தான் உங்களிடம் நான் பேசுகிறேன் எனக் கூற குழப்பம் அடைகிறார்.
இவ்வாறு இதன் மூலம் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி தான் தனது முன்னாள் காதலி என்பதை ஜீவானந்தம் தெரிந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. மறுபுறம் ஆதிரை கரிகாலனை வேண்டாம் என கதற அதற்கு கரிகாலன் இங்கு இருக்கிறவங்க எல்லாம் என்ன பைத்தியக்காரன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனா எனக்கும் ஒரு மனசு இருக்கு என்று சொல்ல ஜான்சிராணி கண் கலங்குகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.