Ethirneechal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சீரியலில் முதுகெலும்பாக இருப்பவர் குணசேகரன் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சொத்திற்காக குணசேகரன் என்ன வேணாலும் செய்யும் நிலைமைக்கு வந்து விட்டார். ஆனால் முழு சொத்தையும் ஜீவானந்தம் தற்பொழுது வைத்துள்ளார்.
ஜீவானந்திடமிருந்து சொத்தை அபகரிக்க வேண்டும் என மருமகள்களை தூண்டி விடுவது அதுமட்டுமில்லாமல் அப்பத்தாவை வெளியே விட்டால் ஆபத்து என ரூம்பிலேயே அடச்சு வைத்திருந்தார் குணசேகரன் மேலும் ஜீவானந்தம் இருந்தால் நமக்கு சொத்து வராது என எண்ணி கதிரை வைத்து ஜீவானந்தம் கதையை முடிக்க முடிவு செய்தார். ஜீவானந்தத்தை கொல்லப்போன கதிர் எதிர்பாராத விதமாக ஜீவானந்தத்தின் மனைவியை சுட்டுவிடுகிறார்கள்.
இதனை ஜனனி பார்த்து விடுகிறார் ஆனால் யார் சுட்டார் என்பது ஜனனிக்கு தெரியாது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஜனனி கண்டிப்பாக ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் தான் ஆள் வைத்து சுட்டு இருக்க வேண்டும் என கூறுகிறார் அதேபோல் மற்றவர்களும் எனக்கு அந்த டவுட்டு இருக்கு எனக்கு கூறுகிறார்கள்.
அடுத்த காட்சியில் குணசேகரன் எங்கேயோ அப்பத்தாவை ஒளித்து வைத்துவிட்டு அப்பத்தா இவ்வளவு பேர் இருக்கும் பொது எங்க போனாங்க என கேள்வி எழுப்புகிறார் இதனால் கடுப்பான ஜனனி அப்பத்தாவை நீங்க தான் எங்கேயோ ஏதோ பண்ணிட்டீங்க என்ன பண்ணுனீங்க சொல்லுங்க என வேகமாக கத்துகிறார் இதனால் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் மற்றவர்களும் உங்க தம்பியும் தான் ரொம்ப நாளா காணோம் எங்கேயாவது தேடினீங்களா என கேட்கிறார்.
இப்படி மாற்றி மாற்றி குணசேகரனை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் குணசேகரன் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்து வருகிறார். அப்பத்தாவை யாராவது கடத்தி விட்டார்களா அல்லது அப்பாத்தா எங்கு போனார் குணசேகரன் மறைத்து வைத்துவிட்டு இதுபோல் நாடகமாடுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.