Ethirneechal : குணசேகரன் எதிர்பார்த்த சொத்து கைக்கு வராததற்கு காரணம் ஜீவானந்தம் தான் அதனால் ஜீவானந்தம் சேப்ட்டரை க்ளோஸ் செய்ய வேண்டும் என குணசேகரன் புதிய ஆளை இறக்குகிறார்.
சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர வைக்கும் வகையில் எபிசோட் அமைந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில் ஜீவானந்தத்திடம் போட்டி போட்டு நம்மளால் சொத்தை வாங்க முடியாது என எண்ணி குணசேகரன் பக்காவாக பிளான் செய்து அம்மாவிடம் இனிமேல் சொத்தை வாங்க வேண்டியது உன் மருமகளுடைய கடமை என பேசுகிறார்.
இதனால் கோபமடைந்த ரேணுகா ஆம்பளைங்க இத்தனை பேர் இருக்கும்பொழுது நாங்கள் போய் கேட்கணுமா என வாய்க்கு வந்தபடி நக்கலாக பேச உடனே அடிக்க கை ஓங்குகிறார். அந்த சமயத்தில் ஜனனி நிறுத்துங்க என கத்தி சொத்தை வாங்குவது எங்களுடைய பொறுப்பு என்பது போல் பேசுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் ஆனால் குணசேகரன் மற்றும் அவருடைய சகோதரர்கள் அனைவரும் இதை உன் வாயால் சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகம் என நினைக்கிறார்கள்.
பிறகு பெட்டிற்கு சென்று குணசேகரன் தன்னுடைய சகோதரர்களிடம் சொத்தை பொம்பளைங்க பேர்ல மாத்தி எழுத சொன்னேனே என ஆடிட்டரிடம் ஏதோ ரகசியம் பேச அத்துடன் முடிந்தது நேற்றைய ப்ரோமோ. இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஜனனி ஜீவானந்தம் யார் அவனுடைய முழு பேக்ரவுண்ட் என்ன என்பது குறித்த தகவல் நமக்குத் தெரிந்தால் தான் அதன் பிறகு நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் காரில் குணசேகரன் மற்றும் தன்னுடைய தம்பிகளுடன் ஜீவானந்தத்தை எதிர்கொள்வதற்காக புதிய ஆளை இறக்குவதற்காக சென்னை கிளம்புகிறார் அதனை தன்னுடைய தம்பியிடம் கூறுகிறார். ஜீவானந்தத்தை எதிர்க்க குணசேகரன் இறக்கும் ஆள் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.