Ethirneechal serial actress: எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
குழந்தைகள் முதல் இளத்தரசிகள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் எதிர்நீச்சல் சீரியல் வாரம் தோறும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து டாப் சீரியலாக விளங்குகிறது. இந்த சூழலில் எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோயினாக ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
நைட் ரூம்க்கு வரியா பிரபல நடிகையை அழைத்த நடிகர்.! வெளிப்படையாக உண்மையை உடைத்த கிரண்…
அதாவது மதுமிதா கன்னட சீரியல் மூலம் சின்னத்திரை அறிமுகமானார் ஆனால் அந்த சீரியலுக்கு சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. தற்பொழுது தமிழில் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நடிகை மதுமிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது. இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாகுவது வழக்கம் இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய ஆண் நண்பருடன் செம போதையில் அதுவும் ராங் ரூட்டில் சென்று எதிரே டூவீலரில் வந்த போலீஸ்காரர் ஒருவரின் வண்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
நைட் ரூம்க்கு வரியா பிரபல நடிகையை அழைத்த நடிகர்.! வெளிப்படையாக உண்மையை உடைத்த கிரண்…
இந்த சம்பவம் குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, இந்த விபத்து சோழிங்கநல்லூர் பகுதியில் இருக்கும் இடத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலீசார் வந்து அடிப்பட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மதுமிதாவையும் அவரது நண்பரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அப்பொழுது ராங் ரூட்டில் வந்தது எங்கள் தப்பு இல்லை.. எதிரே வந்த போலீஸ் தான் வேகமாக வந்து காரின் மீது மோதினார் என கூறியுள்ளார்களாம். இந்த விபத்து நடந்து இரண்டு நாட்களாகியும் இது குறித்து மதுமிதா பெருசாக தனது தரப்பிலிருந்து எதுவும் சொல்லவில்லை என கூறப்படுகிறது.