Ethirneechal serial Gunasekaran: அறிமுகமான காலகட்டத்தில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது. எதிர்பாராத அளவிற்கு ஹிட் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சூழலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
எனவே இதனால் குணசேகரன் கேரக்டருக்கு திரைப்படங்களில் நடித்து வந்த வேல ராமமூர்த்தி தற்பொழுது குணசேகரனாக என்ட்ரி கொடுத்துள்ளார். திரைப்படங்களில் வில்லன், நகைச்சுவை கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் வேல ராமமூர்த்தி சிறப்பாக நடிக்கக்கூடிய ஒருவர் எனவே இவர் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆளு தான் சிங்கிள் பல கோடி சொத்து சேர்த்துள்ள கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
இந்த நிலையில் வேல ராமமூர்த்தி ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதனால் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனவே ஆரம்பத்தில் இந்த சீரியலில் நடிக்க மறுத்து வந்த நிலையில் பிறகு வேறு வழி இல்லாமல் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க தொடர்ந்தார். பொதுவாக எந்த சீரியலில் கதாபாத்திரம் மாற்றப்பட்டாலும் அவர்களை மக்கள் விரைவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தொடர்ந்து விமர்சனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படித்தான் குணசேகரன் கேரக்டருக்கு மாரிமுத்து போல் வேல ராமமூர்த்தி செட்டாக வில்லை என கூறி வருகிறார்கள். ஏற்கனவே ஒரு படத்திற்காக பாரீசில் படப்பிடிப்பு முடித்துவிட்டு தான் குணசேகரன் கேரக்டரில் வேலராமமூர்த்தி நடிக்க தொடங்கியுள்ளார்.
வேல ராமமூர்த்தியை விட தொக்கான வில்லனை இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் எதிர்நீச்சல் குழு..
இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பிற்காக பாரீஸ்க்கு சென்று இருக்கிறார் அதோடு மட்டுமல்லாமல் மாடர்னாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்புகள் முடிந்தவுடன் மீண்டும் எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு போல் எதிர்நீச்சல் சீரியல் சொல்லும் அளவிற்கு இல்லாத காரணத்தினால் வேல ராமமூர்த்தி என்ட்ரி விரைவில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.