Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்திய எபிசோடில் குணசேகரன் ஹாலில் உட்கார்ந்து கொண்டு ஈஸ்வரியை பிரித்து விட வேண்டும் என ஊர் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அப்பத்தா வீட்டிற்கு வந்து இங்கே என்ன நடக்கிறது என சத்தம் போடுகிறார் அப்பொழுது ரேணுகா ஈஸ்வரி அக்காவை விவாகரத்து செய்ய போகிறாராம் என உண்மையை போட்டு உடைக்கிறார்.
அதெல்லாம் இருக்கட்டும் அதற்கு முன்பு உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் எல்லாரும் வெளியே போறீங்களா இது என்னோட பங்கு என பேசுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு ஊர் பெரிய மனுஷர்களை வீட்டை விட்டு போங்க நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய 40 சதவீத ஷேர்ரில் தான் இந்த இடம் இருக்கிறது அதில் தான் நீங்க உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்க என பேசுகிறார் அப்பத்தா.
உடனே குணசேகரன் உனக்கு சொந்தமான மாடிக்கு வா நான் அங்கு வச்சு உன்னிடம் பேச வேண்டும் என சொல்லி மாடிக்கு அழைத்து செல்கிறார் அதனை தொடர்ந்து ஞானத்திற்கு போன் போட்ட குணசேகரன் அவரை அவசரமாக வீட்டிற்கு அப்பத்தா வந்துள்ளதை கூறுகிறார், யாரும் வேண்டாம் என்று தானே அப்பத்தா போனாங்க அப்புறம் எதுக்கு மறுபடியும் அந்த கிழவி இங்கு வந்து இருக்கு அதுவும் போலீஸோட வீட்டுக்குள்ள வந்து இருக்காங்க எனக் குணசேகரன் சொல்லுகிறார்.
சரி அப்பத்தா என்னதான் சொல்லுதுன்னு பார்ப்போம் என அனைவரும் மாடிக்கு போகிறார்கள் அங்கே அப்பத்தாவை பார்த்து ஞானம் நான் அண்ணன் ஆரம்பத்தில் சரியில்லாமல் சில விஷயங்களை செய்கிறார் என்று நினைத்தேன் ஆனால் இப்பதான் தெரியுது அவர் செய்வது தான் சரி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சொத்தை சம்பாதிச்சாரு ஆனா நீங்க இப்படி எல்லாம் பண்ணலாமா என்று கேள்வி கேட்க அதற்கு அப்பத்தா நான் கொடுத்த அஞ்சு லட்சத்தில் தான் முதலில் இந்த சம்பாத்தியம் வந்தது என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்கள் அண்ணன் முதலில் கம்பெனி தொடங்கும் பொழுது எத்தனை நோட்டீஸ் வந்தது தெரியுமா அதையெல்லாம் படித்து உங்களுக்கு பார்க்க தெரியுமா என கேள்வி கேட்கிறார்.
அது மட்டும் இல்லாமல் அது எல்லாத்துக்கும் ஆடிட்டரிடம் நான் தான் ரிப்ளை அனுப்பி இருக்கேன் இல்லன்னா அன்னைக்கு எல்லாம் இழுத்து மூடி இருப்பாங்க நான் மட்டும் இல்லன்னா அந்த அஞ்சு லட்சம் பணம் யார் கொடுத்த உதவி இருப்பாங்க, இந்நேரம் உங்க அண்ணன் டீ கடைக்கு தான் முதலாளியா இருந்திருப்பார் என அப்பத்தா கூற அப்பத்தா கழுத்தை நெரிக்க கதிர் முயற்சி செய்கிறார் உடனே போலீஸ் ஏ கையேடு இல்லன்னா உள்ள தூக்கி வச்சிருவேன் என மிரட்டுகிறார்கள். அதன் பிறகு கதிர் அமைதியாக இருக்கிறார் உடனே அப்பத்தா என்னோட சொத்தை இன்னும் ஒரு வாரத்தில் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யப் போகிறேன் அது வரைக்கும் இந்த மருமகளை வைத்து டார்ச்சர் செய்து என்கிட்ட வந்து சொத்து கேட்க சொல்வது இதெல்லாம் இருக்கக் கூடாது.
அதேபோல் சக்தியம் ஜனனியை இனிமேல் இந்த வீட்ல தான் இருப்பாங்க அப்படி ஏதாவது பிரச்சனை பண்ணுனீங்கன்னா கீழ் போர்ஷனை இழுத்து மூடிடுவேன் நீங்க மாடிக்கு கயிறு வச்சு ஏறி போய்க்கொங்க அத பத்தி எனக்கு கவலையே கிடையாது என அப்பத்தா குணசேகரனை பார்த்து மிரட்டுகிறார். இதற்கு குணசேகரன் பதில் பேச முடியாமல் முறைத்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் பேசற காலம் போயி இப்ப கேக்குற காலம் வந்துடுச்சு என புலம்புகிறார் பின்பு வெளியே சென்று அவங்க அடுத்த மூவ் என்ன வைக்க போறாங்கன்னு தெரியாம நம்ம எதுவுமே செய்ய முடியாது என வக்கீல் கூற உடனே குணசேகரன் அப்பத்தாவை போட்டு தள்ளிடலாமா என கேட்கிறார் இதற்கு அனைவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்க்கிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.