Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நந்தினி சொன்ன நேரத்தில் தன்னுடைய சமையல் ஆர்டரை டெலிவரி பண்ண முடியாமல் திணறுகிறார் அதனால் பெண் வீட்டார் வீட்டிற்கு வந்து அட்வான்ஸ் தொகையை வாங்கி கொண்டு எதற்காக உணவை டெலிவரி செய்யவில்லை என கத்துதுகிறார்கள் உடனே கடுப்பான நந்தினி உங்களுக்கு அட்வான்ஸ் பணம் மட்டும் தானே வேணும் என முடிவு செய்து தன் கழுத்தில் இருந்து தாலியை கழட்டி கொடுக்கப் போகிறார்.
இதனால் கடுப்பான விசாலாட்சி உன் புருஷன் கூத்துகள் மாதிரி உசுரோட இருக்கும் பொழுது நீ தாலிய கழட்டுர என சொல்லி திட்டுகிறார். அதற்கு நந்தினி அவங்க மரியாதை கொடுத்தால் தானே நான் மரியாதை கொடுக்க என்னைய பொறுத்த அளவு என் கழுத்துல கிடக்கிறது வெறும் செயின் மட்டும் தான் என பேசுகிறார் இதனால் விஷாலாச்சி கோபப்பட்டு கன்னத்தில் ஒரு அறை விடுகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த ப்ரோமோவில் நந்தினியின் மகள் நீ இங்கே இருந்து போயிடுமா அப்பதான் நீ இல்லாத வீடு எப்படி இருக்குன்னு இவங்களுக்கு எல்லாம் புரியும் என கூறுகிறார்.
அது மட்டும் இல்லாமல் ஜனனி சித்தி நீங்கதானே ஐடியா குடோன் பட்டுனு ஒரு முடிவு பண்ணி எல்லாரையும் தட்டி தூக்குங்க எனக் கூறுகிறார் மற்றொரு பக்கம் விசாலாட்சி இனிமேல் இந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியே கால் எடுத்து வைக்க கூடாது என ஆர்டர் போடுகிறார். அதற்கு விஷாலாட்சியை மிரட்டுவது போல் ஈஸ்வரி ஆத எல்லாத்தையும் நான் தான் முடிவு பண்ணனும் என திட்டவட்டமாக கூறி விடுகிறார்.
கடந்த சில வாரங்களாகவே குணசேகரன் இல்லாததால் எதிர்நீச்சல் சுவாரசியம் குறைந்துவிடும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஆனாலும் கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாமல் காரம் சாரமாக தான் சென்று கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.