Ethirneechal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது அதற்கு காரணம் இந்த சீரியலில் வில்லத்தனமாக நடித்து வரும் குணசேகரன் தான் இவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் குணசேகரன் சொத்துக்காக பல சித்து வேலைகளை செய்து வருகிறார் இதுதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சமீப காலமாக குணசேகரனுக்கு எதிர்நீச்சல் சீரியலில் அடி மேல் அடி விழுந்து வருகிறது. அதற்கு காரணம் அப்பத்தா தான் 40 சதவீத சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் குணசேகரன் இருக்கிறார் ஜீவானந்தத்தை கொலை செய்ய குணசேகரன் திட்டம் போட்டது அதனால் வேறு ஒரு பிரச்சனையை உள்ளே இழுத்து வந்தது என நீண்டு கொண்டே போகிறது.
அது மட்டுமில்லாமல் ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி தான் குணசேகரன் மனைவி ஈஸ்வரி என குணசேகரனுக்கு தெரிய வர இன்னும் ஒரேடியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் இதனால் குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய ஊர் பெரியவர்களை வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார் அப்பொழுது அப்பத்தா போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு கெத்தாக நுழைக்கிறார்.
குணசேகரன் அவர்களிடம் உன்னிடம் தனியாக பேச வேண்டுமென மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பேசுகிறார் அப்பொழுது இனிமே எனக்கு இருக்கும் சொத்துக்களை நான் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப் போகிறேன் இனிமேல் மருமகளை வைத்து சொத்தை கேட்க சொல்வது என எதுவும் இருக்கக் கூடாது என குணசேகரனுக்கு வார்ன் செய்கிறார்.
இந்த எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு தம்பியாக நடித்து வருபவர் சக்தி இவர் தன் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு துணை போகாமல் தைரியமாக வீட்டு பெண்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் இவர் கதாபாத்திரம் பெண்களை வெகுவாக கவரும் அது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு பாசிட்டிவாக பேசி வருபவர் இவர் கார்த்திகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார் அவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.