திரை தீ பிடிக்கும் பாடலுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த அடுத்த ஆதி குணசேகரன்.! சம்பவம் லோடிங்..

ethirneechal october 2 promo
ethirneechal october 2 promo

Ethirneechal today promo october 2 : எதிர்நீச்சல் புரோமோ வீடியோவில் எங்க உங்க அண்ணன காணோம் நக்கலாக கேட்க உடனே கதிர் அண்ணன் சம்பவம் பண்ணனுமா வாங்க என கூறுகிறார் அந்த சமயத்தில் திரைத் தீ பிடிக்கும் பாடலுடன் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் அடுத்த ஆதி குணசேகரன்.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார் இவர் மறைவுக்குப் பிறகு அடுத்த ஆதி குணசேகரன் யார் என்று பலரும் குழம்பி போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஆதி குணசேகரன் செருப்பு துண்டு என எதையாவது காட்டி சீரியலை எபிசோட் நகர்த்தி வந்தார்கள்.

அடுத்த ஆதி குணசேகரனுக்காக வேல ராமமூர்த்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால் அவர் 20 நாட்களுக்கு பிறகு தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்பது போல் கூறிவிட்டார். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பதை காட்டியுள்ளார்கள்.

கதிர் ஞானம் என அனைவரும் காரில் இருந்து இறங்குகிறார்கள் அப்பொழுது விசாலாட்சி நீங்க மட்டும் வரிங்களேடா எங்க உங்க அண்ணன் பெரியவன் என கேட்க அதற்குள் என்ன கொண்டு போன சாப்பாட்டை தின்னுட்டு மயங்கிட்டாரா என்ன நக்கலாக பேசுகிறார் வீட்டு பெண்கள்.

உடனே ஞானம் நாங்க அண்ணனை பார்த்துட்டு தான் வரோம் என பேச அதற்குள் நந்தினி எப்ப பார்த்தாலும் ரியாக்சன் தான் ஓடிக்கிட்டு இருக்கு ஆக்சன காணுமே என கேட்கிறார் உடனே கதிர் குணசேகரனுக்கு போன் பண்ணி அண்ணே இவங்க எல்லாம் ஆக்சன் பாக்கணுமா சீக்கிரம் வாங்க என்பது போல் பேசுகிறார்.

உடனே தார் காரில் கெத்தாக அடுத்த ஆதி குணசேகரன் களம் இறங்குகிறார் இவர் பின் சாயலில் பார்க்கும் பொழுது வேல ராமமூர்த்தி என்பது தென்னந் தெளிவாக தெரிகிறது இருந்தாலும் இன்றைய முழு எபிசோடில் யார் என்பது தெரிய வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.