Ethirneechal marimuthu: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்து டிஆர்பி யிலும் முதலிடத்தை பிடித்து வந்தது. ஆனால் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவரின் இழப்பு சீரியல் ரசிகர்கள் சினிமா ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது.
ஏனென்றால் எதிர்நீச்சல் சீரியலின் தூணாக இருந்தவர் மாரிமுத்து இவரின் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதனால் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை வென்றார். இவர் மறைந்த பிறகு இவரின் கதாபாத்திரத்தை யாரால் நிரப்ப முடியும் என பலரும் பல்வேறு நடிகர்களை கூறி வருகிறார்கள் ஆனால் இனிமேல் மாரிமுத்துவின் கதாபாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாது என ஒரு தரப்பு மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களாகவே குணசேகரன் குரலில் வெங்கட் ஜனா டப்பிங் ஆர்டிஸ்ட் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் மாரிமுத்துவின் குரலுக்கு ஈடு இணையாக இல்லாமல் இருந்து வருகிறது அதனால் பெரிதாக எடுபடவில்லை சீரியல். இந்த நிலையில் மாரிமுத்துவின் இடத்தை எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி ஈடு செய்ய முடியும் என சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் திட்டமிட்டார் ஆனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது அவர் படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருப்பதால் தேதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் அவரை நடிக்க வைக்க சமரசம் செய்து வருவதும் தற்பொழுது தெரியவந்துள்ளது. எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வன் பார்வையில் இன்னும் சில நபர்கள் சிக்கி உள்ளார்கள். அவர்களில் ஒருவர் பொன்வண்ணன். இவர் கிராமிய படங்களில் அதிகமாக நடித்துள்ளார் மதுரை தமிழ் இவருக்கு சரளமாக பேசுவார் வில்லனாகவும், காமெடி கதாபாத்திரமும் இவருக்கு கைவந்த கலை அதனால் இவரும் திருச்செல்வம் கண்காணிப்பில் இருக்கிறார்.
ஆடுகளம், சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் நடித்தவர் நரேன் இவர் காமெடி, வில்லன் இரு கதாபாத்திரத்திலும் மிரட்டி உள்ளார். அந்த வகையில் ஆதி குணசேகரன் ஆக நடிக்க இவரும் லிஸ்டில் இருக்கிறார். அடுத்ததாக இயல்பாகவே மதுரை தமிழ் பேசக் கூடியவர் நடிகர் ரோபோ சங்கர் இவருக்கும் வில்லத்தனமும் காமெடியும் வரும் அதனால் இவரையும் குணசேகரன் லிஸ்டில் வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அக்மார்க் மதுரை தமிழில் பேசி மிரட்ட கூடியவர்களில் தம்பி ராமையா அவர்களும் ஒருவர் கிட்டத்தட்ட மாரிமுத்துவின் எல்லா கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமானவர் இவர் ஆனால் சினிமாவில் மிகவும் பிசியாக இருப்பதால் சின்னத்திரையில் நடிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து உடல் மொழி வாய்மொழி என அனைத்திலும் கைதேர்ந்தவர் வில்லத்தனமாகவும் மிரட்டுபவர் அவர் வேறு யாரும் கிடையாது ரவி மரியாதான் இவர் வில்லத்தனமாகவும் காமெடியாகவும் பேசக்கூடியவர். இவரும் இயக்குனர் லிஸ்டில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் சிலர் இயக்குனர்களின் பார்வையில் இருக்கிறார்கள் கடைசியில் யார் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.