Ethirneechal next gunasekaran : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த ரசிகர்களிடம் இருந்து வருகிறது இந்த நிலையில் ஒரு வழியாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை உறுதி செய்துள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது..
சன் தொலைக்காட்சியில் நீண்ட தொடராக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் டிஆர்பி யில் பட்டையை கிளப்பி வருகிறது அதற்கு காரணம் குணசேகரன் கதாபாத்திரம் தான், இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இவரின் மறைவுக்கு பிறகு அடுத்ததாக எதிர்நீச்சல் சீரியலில் யார் குணசேகரனாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது அந்த கேரக்டருக்காக பல நடிகர்களின் பெயர் அடிபட்டது அந்த வகையில் ராதாரவி, இளவரசு, ஆனந்தராஜ், வேல ராமமூர்த்தி, தம்பி ராமையா என பல நட்சத்திரங்களின் பெயர்களை பலரும் பரிந்துரை செய்தார்கள்.
ஆனால் குணசேகரன் மறைந்த உடனயே இந்த கதாபாத்திரத்திற்கு பலரும் சொன்ன பெயர்தான் வேல ராமமூர்த்தி இது தொடர்பாக வேல ராமமூர்த்தியை சந்தித்து பலரும் பேட்டி எடுக்க ஆரம்பித்தார்கள் அதற்கு அவர் கூறியதாவது என்னை தொடர்பு கொண்டது உண்மைதான் ஆனால் நான் படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறேன் இன்னும் சிறிது காலம் போனால் தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என கூறியிருந்தார்.
ஆனால் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இறுதியாக வேல ராமமூர்த்தி தான் அடுத்த குணசேகரனாக களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் இன்னும் சில தினங்களில் ஆதி குணசேகரனாக வேளாராமமூர்த்தியை இன்னும் சில தினங்களில் நீங்கள் அனைவரும் பார்க்கலாம் ஏனென்றால் வேல ராமமூர்த்தியை வைத்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.