Ethirneechal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நீண்ட தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் இந்த நிலையில் அடுத்த குணசேகரனாக நடிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் வெள்ளை வேட்டி அணிந்த ஒருவர் காரில் வந்து இறங்குவது போல் நடந்து செல்வது போன்ற காட்சிகள் சீரியலில் காட்டப்பட்டுள்ளது.
சீரியலில் காட்டப்பட்ட நபர் அடுத்த குணசேகரன் அல்லது அவரின் சகோதரரா என தெரியவில்லை அந்த கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு கேள்விகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. பொதுவாக ஒரு சீரியலில் நடிக்கும் ஒருவர் இறந்தாலும் அல்லது வேறு சீரியலுக்கு நடிக்க ஆரம்பித்தாலும் உடனே அவரை மாற்றி விடுவது வழக்கம் தான் ஆனால் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வேடத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறந்து சில வாரங்களே ஆகிவிட்ட நிலையில் அந்த கேரக்டரில் யாரும் இன்னும் இடம் பெறவில்லை.
அதேபோல் ஆதி குணசேகரனுக்கு எந்த மாதிரியான திரைக்கதை எழுத போகிறார் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை இந்த நிலையில் ஆதி குணசேகரனாக வேற நடிகர் நடிக்க வாய்ப்பே கிடையாது அவர் நடிப்பிற்கு வேறு யாராலும் நடிக்க முடியாது என கூறி வருகிறார்கள். அதேபோல் இந்த சீரியலின் இயக்குனர் குணசேகரனை மாரிமுத்து சார் மட்டுமே நடிக்க வைக்க முடியும் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். அதேபோல் குணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருந்தது போல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
குணசேகரனுக்கு பதிலாக அண்ணன் மீண்டும் வில்லத்தனம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் குணசேகரனின் சகோதரர் மருத்துவமனையில் இறந்து விட்டதாக விஷாலாட்சி கூறிவிட்டார் இந்த நிலையில் கடைசி நேரத்தில் எபிசோடில் வெள்ளை வேட்டியில் ஒரு நபர் காரில் வந்து இறங்குவது போல முடிகிறது இதை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகிறது.
இதனை நெட்டிசன் ஒருவர் அங்கே நடக்கிற பாதத்தையும் கிடக்கும் செருப்பையும் பார்க்கும் பொழுது கால் கலர்ஃபுல்லாக தெரிகிறது அதனால் கண்டிப்பாக வேலராமமூர்த்தி ஆகவோ பசுபதியாகவோ இருக்க வாய்ப்பே கிடையாது நடிகர் அழகம் பெருமாளாக இருக்கலாம் என ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்கள் இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.