Marimuthu Net worth : தமிழ் சினிமாவில் உதவிய இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் மாரிமுத்து இவர் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்துள்ளார், அப்பொழுது தானே காரை இயக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரின் இழப்பு எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
மாரிமுத்து 35 வருடமாக சினிமாவில் பயணித்து வருகிறார் ஆனால் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நீண்ட தொடரான எதிர்நீச்சல் சீரியல்தான். தன்னுடைய வில்லத்தனமான நடிப்புடன் நகைச்சுவை தோரணையில் பேசும் இவரின் அழகை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இனி எதிர்நீச்சல் சீரியலில் இவர் இருக்க மாட்டார் என்ற வருத்தம் ரசிகர்களிடம் இன்னும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மாரிமுத்து ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் அப்பொழுது இவருக்கு சம்பளமாக வெறும் 1500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அதன் பிறகு மிகவும் அரும்பாடு பட்டு கஷ்டப்பட்டு குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து வந்தார் அது மட்டும் இல்லாமல் இவர் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஆனால் அதுவும் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
பின்பு ஒரு சில திரைப்படங்களில் குணசத்திர வேடத்தில் நடித்து வந்தார் ஆனாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியல் தொடரில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கியுள்ளார் மாரிமுத்து.
ஆரம்பத்தில் குறைவாக வாங்கிய மாரிமுத்து இவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலம் அடைந்ததால் மவுசு கூடிக் கொண்டே போனது அதனால் சன் தொலைக்காட்சி நிறுவனமோ பணத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் அந்த வகையில் பிறகு ஒரு நாளைக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மாரிமுத்து சம்பளமாக வாங்கி வந்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்ததால் குணசேகரனுக்கு இன்னும் சம்பளம் அதிகமாக பேசப்பட்டதாம் இந்த நிலையில் குணசேகரன் சமீபத்தில் ஒரு கனவு விடு ஒன்றை கட்டியுள்ளார். ஆனால் அந்த வீட்டிற்கு குடி போவதற்கு முன்பே இவர் மறைந்து விட்டார் அதுமட்டுமில்லாமல் சொந்தமாக கார் ஒன்றையும் வைத்துள்ளார் இந்த நிலையில் மாரிமுத்துவின் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது மொத்தமாக மாரிமுத்து 25 கோடி சொத்துமதிப்பு இருக்கும் என கூறபடுகிறது.