Ethirneechal : டிஆர்பி யில் உச்சத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பணிக்காக காலை 6:00 மணிக்கு சென்று இருந்தார் அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் ஏற்பட்டது.
இதனை எடுத்து காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அவர் சென்றார் ஆனால் இருப்பினும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலை முதலில் சென்னையில் வைத்தனர் சினிமா பிரபலங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பார்த்தனர் அதன் பிறகு அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தது.
குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி மாரிமுத்துவை பார்க்க முடியாததால் ரசிகர்கள் ஒரு பக்கம் கதறுகின்றனர் மறுபக்கம் எதிர்நீச்சல் டீம் மாரிமுத்துவுக்கு நிகரான ஒரு ஆளை குணசேகரன் கதாபாத்திரத்தில் இறக்கி விடும் வேண்டுமென முழு முயற்சியில் வேலை பார்த்தது இதற்கு வேலராமமூர்த்தி செட் ஆகுவார் என முதலில் அவரை அணுகியது ஆனால் அவரோ பல படங்களில் பிசியாக இருப்பதால் முதலிள் தயங்கினாராம்.
இருந்தாலும் அவர் ஒத்துக் கொள்வார் என எதிர்நீச்சல் டீம் நம்பியது ஆனால் அவர் தொடர்ந்து பிஸியாக இருந்து வருவதால் இதுவரை சரியான பதிலை கூறவில்லை இனி அவரை நம்பி பிரயோஜனம் இல்லை அவரை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டு வேறு நடிகர்களை தேடி வருகிறதாம். அதன்படி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வெள்ளி திரையில் கலக்கி கொண்டு வரும் இரண்டு நடிகர்களை தேர்வு செய்துள்ளது அந்த நடிகர்கள் வேறு யாரும் அல்ல..
குணத்திர கதாபாத்திரத்திம் மற்றும் முக்கிய கதாபாத்திரகளில் பின்னி பெடல் எடுக்கும் பசுபதி மற்றும் 80 காலகட்டங்களிலிருந்து இப்பொழுது வரையிலும் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து கைதட்டல் வாங்கி வரும் ராதாரவியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் யாரேனும் ஒருவர் ஓகே சொன்னால் கூட உடனே தட்டி தூக்க எதிர்நீச்சல் டீம் ரெடியா இருப்பதாக கூறப்படுகிறது.