ethirneechal january 9 : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வந்தது ஆனால் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு சிறிது டல்லடிக்க ஆரம்பித்தது இந்த நிலையில் ஜான்சி ராணி வந்த வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்.
அதாவது ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளுக்கு எதிராக திருப்பி விட புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார், இந்த சைடு கேப்பில் கரிகாலன் தர்ஷணியோடு தனக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா என்ற கேள்வியை கேட்கிறார் அதற்கு ஈஸ்வரி கடும் கோபத்தில் திட்டி தீர்க்கிறார்.
இந்த நிலையில் எலக்ஷனில் ஜெயிக்கப் போவது ஈஸ்வரியா அல்லது குணசேகரன் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. குணசேகரன் தாய் மாமா புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தாலும் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது.
அதேபோல் எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் தான் எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டிருப்பார் அதனால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் திமிர் ஆகவே இருந்து வந்த குணசேகரனுக்கு அடுத்தடுத்து பெரும் அடி விழப் போகிறது, ஒரு பக்கம் அப்பத்தா பிரச்சனையில் என்ன நடந்தது என்பதை மீண்டும் கேஸை ரிஓபன் செய்கிறார் ஜனனி.
மற்றொரு பக்கம் ஆதிரை தனக்கு பிடிக்காத ஒருவரிடம் திருமணம் செய்து வைத்து விட்டதாக குணசேகரன், கதிர், ஞானம் மூவரும் மீதும் போலீசில் கேஸ் கொடுக்கிறார் இதனால் குணசேகரன் தலைமறைவாக இருந்த பொழுது முன் ஜாமின் கேட்டு தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் நந்தினியை குணசேகரன் வாடி போடி என வாய்க்கு வந்தபடி பேச கதிருக்கு மூக்கின் மேல் கோபம் வந்து குணசேகரனை எதிர்த்து பேசுகிறார்.
முதன்முறையாக நந்தினிக்கு சப்போர்ட் செய்து குணசேகரனை கதிர் எதிர்த்து பேசுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் குணசேகரன், கதிர், கரிகாலன், விசாலாட்சி, ஜான்சி ராணி அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குணசேகரன் அண்ணே நீங்க எப்போ உங்களுக்காக வாழ்ந்திருக்கீங்க உங்க தம்பிக்காக மட்டும் தான் மாடா உழைச்சி தீர்ந்திருக்கீங்க இது அவர்களுக்கு தான் புரிய மாட்டேங்குது என கதிரை குத்தி காட்டுகிறார்.
பிட்டு பட நடிகை எல்லாம் பிச்சை எடுக்கணும்.. மோசமான கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..
அந்த சமயத்தில் குணசேகரன் தாய் மாமாவிடம் குணசேகரன் யார் ஜெயிப்பார்கள் என கேட்க நல்லதே நடக்கும் என கூறுகிறார் அதற்கு யாருக்கு நல்லது நடக்கும் என கேட்க நல்லது செய்தவர்களுக்கு நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது நடக்கும் என கூறி விடுகிறார் அப்படியே சைடு கேப்பில் கரிகாலன் எனக்கு எப்ப தர்ஷினியை கல்யாணம் பண்ணி வைப்பீங்க என கேட்க ஈஸ்வரி நாக்கை புடுங்கி கிட்டு சாகுற மாதிரி திட்டி தீர்க்கிறார் அடுத்து சீரியலில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.