Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் வெண்பாவை தேடி குடும்பமே அலைந்து கொண்டிருக்கிறது ஆனால் ஜீவானந்தம் தான் கடத்தி இருப்பார் என குணசேகரன் குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டு தேடாமல் அமைதியாக இருக்கிறார். அதேபோல் கதிர் என் வீட்டுப் பிள்ளையை நானே தேடுகிறேன் என பேச யார் வீட்டுப் பிள்ளையை யார் தேடுவது என கதிரை மிரட்டுகிறார் குணசேகரன்.
நந்தினி பேச பேச கதிரின் மனது மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் குணசேகரன் இருக்க இருக்க இன்னும் கொடூரமான ஆளாக மாறிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் சக்தி ஒரு வழியாக ஒருவரை பிடித்து வெண்பாவை கடத்தி வைத்து நாடகமா ஆடுறீங்க என கேள்வி எழுப்ப ஒரு குடும்பத்தாரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பெண்கள் அனைவரும் அவர் கையை பிடித்து இழுத்து வா சக்தி விசாரிக்கலாம் என அழைத்துச் செல்கிறார்கள் பிறகு தண்ணீர் குடித்துக் கொண்டே ரோட்டை கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு காரில் சக்தி அடிப்பட்டு விடுகிறார் உடனே பதறி அடித்து போய் குடும்ப பெண்கள் அனைவரும் சக்தியை எழுப்பி பார்க்கிறார்கள் ஆனால் சுய நினைவை இழந்து கிடக்கிறார் சக்தி. உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.
அந்த நேரத்தில் குணசேகரன் யார் கடத்திருப்பாங்க அவங்க யாரு எங்க இருக்காங்க என்பது எனக்கு தெரியும் என நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் சக்தி அடிபட்டு இருப்பது இன்னும் குணசேகரனுக்கு தெரியாது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.