Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா ஒரு விழா நடத்தப் போவதாகவும் அதில் வந்து அனைவரும் நீங்கள் பேச வேண்டும் எனவும் குணசேகரன் மருமகளிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு ஜீவானந்தம் தலைமை தாங்க போகிறார் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
இதனை கேட்டுக் கொண்டு வந்த கதிர் கைதட்டி வரவேற்கிறார் அது மட்டும் இல்லாமல் விஷாலாச்சி உங்களுக்கு என்ன பைத்தியமா தேவையில்லாம ஏதாவது வம்பை விலைக்கு வாங்குவிங்களா யார் வீட்டு விசேஷத்திற்கு யார் வர்றது என திட்டுகிறார் ஆனால் அப்பத்தா கண்டிப்பா ஜீவானந்தம் வருவார் என கூறுகிறார்.
உலக கோப்பை 2023 : ரோகித் சர்மா ஆட்டம் தான்.. வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக் சொன்ன பதிலை பாருங்கள்
உடனே கதிர், அம்மா நீங்க சும்மா இருங்க அந்த ஜீவானந்தம் வரணும் அப்பதானே நான் மாலை போட்டு மரியாதை பண்ண முடியும் என நக்கலாக பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நீங்க மயங்கி கிடந்தப்ப 40 சதவீத சேரை பொத்தி பொத்தி வச்சு உன்னிடம் வந்து பத்திரமா சேர்த்தாங்களா அதுக்காகவே அவருக்கு மரியாதை பண்ணனும் நீங்க திருவிழாவா நடத்துங்க நாங்க எங்க வேலையை பார்க்கிறோம் என கூறுகிறார்.
இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பிசினஸ் தொடங்குவதற்கு முன்பு இவ்வளவு பிரச்சனை வருகிறது என சக்தி கூற அதற்கு ஜனனி அதற்காக அப்படியே விட்டுட்டு போயிடலாம்னு சொல்றியா என எடுத்து எறிந்து பேசுகிறார். இந்த நிலையில் ஜீவானந்தத்தை சந்திக்க சென்ற ஈஸ்வரி நீங்க அந்த பங்க்ஷனுக்கு வரக்கூடாது அப்படி வந்த தேவையில்லாத சில சிக்கல்கள் வரும் என கூறுகிறார்.
ஆனால் ஜீவானந்தம் வேற வழியே இல்ல நான் வந்து தான் ஆகணும் எனது தென்னந் தெளிவாக கூறி விடுகிறார். உங்க மனைவி சாமிகிட்ட போனதுக்கு காரணம் என் புருஷனும் கதிரும் தான் என உண்மையை கூறிவிடுகிறார் குணசேகரன் மற்றும் கதிர் தான் உங்கள் மனைவியை கொன்றது போல் தென்னந் தெளிவாக கூறி விட்டு செல்கிறார் இதனால் ஜீவானந்தம் அதிர்ச்சியாகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.