சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரனின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருக்கும் மருமகள்கள் அனைவரும் போராடி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ஆதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி இதில் ஜெயித்திருந்தாலும் மருமகள்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை மானம், மரியாதை இல்லாமல் அவமானப்படுத்தி வருவது பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்து வருகிறது.
இவ்வாறு மருமகள்கள் பத்தாது என வீட்டில் இருக்கும் சிறுசுகள் கூட அவரை அவமானப்படுத்தி வருகிறது எனவே இதற்கு மேல் தான் குணசேகரனுக்கு ஆப்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரேணுகா தன்னுடைய மகளுக்கும் ஆதிரைக்கு நடந்தது போன்ற அநியாயம் நடக்கக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமாக பேசி குணசேகரனை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்.
இவ்வாறு ரேணுகா பேசுவதனால் ஜனனியினால் தான் அனைவரும் எப்படி பேச ஆரம்பித்து விட்டதாக குணசேகரன் கூறி வருகிறார். இவ்வாறு குணசேகரன் அப்பத்தாவை 40% சொத்துக்காக அமைதியாக இருந்து வரும் நிலையில் எனவே இதனை வைத்துக்கொண்டு ரேணுகா பேச ஆரம்பித்திருக்கும் நிலையில் இவரை போலவே நந்தினி, ஈஸ்வரி என அனைவரும் பேச ஆரம்பித்து சுதந்திரமாக வாழ போராடி வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேணுகாவை வைத்து தான் சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று ரேணுகா பேசியதை எதிர்த்து பேசாமல் குணசேகரன் வாய் அடைத்து போய்விட்டார் அதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவும் பெரியப்பா என்று கூட பார்க்காமல் அவருடைய முன்பும் அவருடைய முடிவை சொன்னது பாராட்டக் கூடிய ஒன்றாக அமைந்தது.
இவ்வாறு ஒட்டுமொத்த குடும்பமும் இவருக்கு எதிராக இருந்து வரும் நிலையில் குணசேகரன் நிலமை இருக்க இருக்க மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு மருமகள்கள், சிறுசுகள் முதல் அனைவரும் எவ்வளவு கழுவி ஊற்றினாலும் அதனை எல்லாம் துடைத்துக் கொண்டு சூடு சொரணை இல்லாமல் குணசேகரன் இருந்து வருகிறார் இவ்வாறு விரைவில் குணசேகரனின் கொட்டத்தை மருமகள்கள் அடக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.