சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் குணசேகரன் ஜனனியை பழி வாங்குவதாக நினைத்து தனக்கு தானே ஆப்பு வைத்திருக்கிறார் அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதாவது அதிரை திருமணம் அருணுடன் நடக்காமல் கரிகாலனுடன் குணசேகரன் நினைத்தது போலவே நடந்து முடிந்திருக்கிறது. எனவே தான் நினைத்தது நடந்ததால் நான் தான் ஜெயித்திருக்கிறேன் என நினைத்து அனைவரையும் படாத பாடு படுத்தி வருகிறார். அப்படி இன்னைக்கு சக்திக்கும் அந்த மெட்ராஸ் காரி ஜனனிக்கும் இருக்கிறது என காத்துக் கொண்டிருந்த நிலையில் பிறகு சக்தி ஜனனி இருவரும் ஆட்டோவில் வருகிறார்கள்.
இவர்கள் வந்தவுடன் எனது காலில் விழுந்து அனைவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்குள் செல்லலாம் ஆனால் இந்த மெட்ராஸ் காரி மட்டும் வர முடியாது வீட்டை விட்டு போக வேண்டும் என கூறுகிறார். அப்பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்னிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பு எனக் கூற அதற்கு ஜனனி நீங்க தோத்துட்டீங்க என சொல்கிறார்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஜனனியை வீட்டை விட்டு வெளியில் தள்ளி விடுவதற்காக கதிர் வர சக்தி பளார் என அறைந்து என்னுடைய மனைவியை யாராவது ஏதாச்சும் சொன்னீங்கனா நான் அடிப்பேன் என பேச குணசேகரன், கதிர் என அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனியை குணசேகரன் வெளியில் போக சொல்ல ஜனனியும் இதற்கு மேல் கிளம்பலாம் என சொல்கிறார். அப்பொழுது வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்கள் நாங்களும் வருகிறோம் எனக் கூறிவிட்டு மொத்தமாக வீட்டை விட்டு கிளம்பி விட இந்த நேரத்தில் அட்வகேட் வர உங்க மருமகள்களுக்கும் பட்டம்மாளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு சார் எனக் கூற அதற்கு குணசேகரன் இப்பதான் அவங்களெல்லாம் வீட்டை விட்டு அனுப்பினேன் எனக் சொல்ல பெரிய தப்பு பண்ணிட்டீங்களே சார் என அட்விகேட் சொல்கிறார் இதனால் குணசேகரன் குழப்பம் அடைய இதோட ப்ரோமோ நிறைவடைகிறது.