சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இத்தனை நாள் ஜீவானந்தம் எங்கே போனார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அவர் கௌதமை சந்தித்திருக்கிறார். எனவே தற்போது தான் அப்பத்தா பற்றிய விஷயங்களை நோண்ட ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது ஜீவானந்தம் அப்பத்தாவிடம் இருந்து கைரேகையை எடுத்த நிலையில் பிறகு ஜனனி எந்த போனும் பண்ணவில்லை அப்படித்தானே என்று கேட்கிறார் அப்பொழுது ஜனனி பெயரை எடுத்ததும் கௌதம் ஷாக்காகி முழிக்கிறார். இதற்கு அடுத்து கௌதம் ஜனனி என்னுடைய தோழி தான் என்று எல்லா விஷயத்தையும் ஜீவானந்தத்திடம் எடுத்துக் கூறுகிறார்.
இவ்வாறு இந்த விஷயங்களை சொல்லும் கௌதம் ஆதிரைக்கு நடந்த கொடூர கல்யாணத்தைப் பற்றியும் கண்டிப்பாக சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஜீவானந்தம் கேரக்டர் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அவர்களுடைய சொத்தை பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி கொடுப்பதுதான் அந்த வகையில் தான் அப்பத்தா இவரிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லி உதவி கேட்டுள்ளார்
எனவே அதற்காகத்தான் யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவின் கைரேகையை எடுத்துள்ளார் இதன் மூலம் யாருக்கு அந்த சொத்து சேர வேண்டுமோ அவருக்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு ஆதிரையின் கல்யாண விஷயத்திலும் பலருக்கும் பங்கு இருக்கும் நிலையில் கரிகாலன் உடன் நடந்த திருமணத்தில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மறுபுறம் ஆடிட்டருக்கும் சொத்து விஷயம் குறித்து தெரிய வர இதனால் குணசேகரனிடம் எச்சரித்து இருக்கிறார். எனவே வீட்டில் இருக்கும் மருமகள்கள் என்னதான் சண்டை போட்டாலும் குணசேகரன் எதுவும் பேசாமல் மானங்கெட்டு இருந்து வருகிறார். இதனை அடுத்து சொத்துக்கள் அனைத்தும் மருமகளிடம் சேர வேண்டும் என்ற பொறுப்பு ஜீவானந்திடம் இருந்து வருகிறது எனவே இதற்காக ஸ்கெட்ச் போட்டு வருகிறார்.
இவ்வாறு ஜீவானந்தத்தின் இந்த முயற்சியினால் குணசேகரன் மூஞ்சில் கரியை பூச இருக்கிறார் எனவே கண்டிப்பாக ஆதிரையின் வழக்கையும் காப்பாற்றப்பட்டு, அப்பத்தா ஆசைப்பட்டது போலவே குணசேகரன் கைக்கு சொத்துக்கள் போகாமல் தடுக்க இருக்கிறார் இது குறித்து எபிசோடுகள் இனிமேல் ஒளிபரப்பாக இருக்கிறது.