குணசேகரனை கைவிட்ட ஆடிட்டர்.. பயந்து தெரிந்து ஓடிய ஜான்சிராணி.! பரபரப்பான நிகழ்வுகளுடன் எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

ethir-neechal
ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நேற்று எபிசோட்டில் ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வருகிறார் அங்கு வந்தவுடன் மாப்பிள்ளை விருந்து என சொல்லி கரிகாலனுக்கு ரசம் சோறு போட்டதை வைத்து பெரிய பிரச்சினை நடக்க இதனால் மருமகள்கள் அனைவரும் கோபப்படுகிறார்கள் பிறகு ரேணுகாவிடம் உன்னுடைய கண்ணு முழியை எல்லாம் தோண்டி எடுத்துடுவேன் பாவாடை சாமி எனக் கூற இந்த நேரத்தில் ஜனனி அநாகரிகமா பேசுவதை நிப்பாட்டுங்க முதல்ல வீட்டை விட்டு போங்க என சொல்ல அதை சொல்ல உனக்கு எந்த தகுதியும் கிடையாது நீ வீட்டை விட்டு வெளியே போ என கூறுகிறார்.

இதனை அடுத்து இன்றைய எபிசோடில் ஜான்சிராணி நந்தினியிடம் சீவி சிங்காரச் அங்கு வந்த பொழுதே நான் நினைச்சேன் நீங்க ஏதோ ப்ளான் போட்டு தான் நாங்க வந்திருக்கீங்கனு எங்க வீட்ல சோத்துக்கு வழி இல்லை என்று நினைத்தீர்களா நான் சமைச்சா ஊரே மணக்கும் என வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார் ஜனனி ஜான்சியை வீட்டை விட்டு போ என அண்ணன் வீட்டில் இல்லை அதனால் தான் இப்படி ஆடுறீங்களா இது சரிபட்ட வராது என ஆதிரையை தரதரவென இழுத்து வருகிறாள்.

இந்த நேரத்தில் கதிர் வர அவனிடம் ஜான்சி முதலிரவு ரெடி பண்ண சொல்லி கேட்கிறார் ஆதிரை இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என சொல்ல மீண்டும் இது சரிப்பட்டு வராது என விடாப்படியாக அழைத்துச் செல்கிறார் யாரும் எதிர்பாராத நிலையில் தர்ஷினி வந்து ஸ்டாப் பிட் எனக்கூறி விட்டு ஜான்சியை வீட்டை விட்டு வெளியே போங்க இல்லைனா போலீசுக்கு போன் பண்ணுவேன் என சொல்ல கதிர் தர்ஷினி என்ன ஓவரா பேசுற என்ன திட்டுகிறார்.

நான் ஓவரா பேசுற அவுங்க வந்ததிலிருந்து என்னென்னமோ பேசுறாங்க இந்த வீட்ல இருக்கவே பிடிக்கல நாங்க இங்க இருக்கிறதா வேண்டாமா என தர்ஷினி கேட்க கூடவே குட்டி பொண்ணு தாராவும் ஆமா எங்களுக்கு பிடிக்கல இந்த ஆன்ட்டியை வெளியே போக சொல்லுங்க என கூறுகிறார்கள். கரிகாலன் உடனே அம்மா இவங்க நிஜமாலுமே செஞ்சாலும் செஞ்சிடுவாங்க மாமா மாதிரி வாயில வடை சுட மாட்டாங்க நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன் என சொல்லி ஜான்சி ராணியை அனுப்பி வைக்கிறார்.

பிறகு குணசேகரன் ஆடிட்டரை சந்திக்க செல்கிறார் இருவரும் காரிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க உங்க வீட்டு மருமகள் பெயரில் நடத்தப்படும் பிசினஸ் அனைத்தையும் உங்க பேயரிலேயே மாற்றி விடுங்கள் உங்க அப்பத்தா சொத்து உங்களுக்கு வருமா என சந்தேகமா இருக்கு என சொல்கிறார். பட்டமாவிடம் இருந்து கைரேகையை வாங்க முடியல கையெழுத்து எழுதியது இன்னும் பதிவு ஆகல இதற்கிடையில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

ஆனால் அது என்ன என்பது பிடிப்படவில்லை என்னை நம்புவதும் நம்பாதது உங்க இஷ்டம் மருமகள்கள் பெயரில் நடத்தப்படும் கம்பெனிகளின் லிஸ்ட் எங்கே இருக்கிறது? அது யார் பெயரில் மாற்ற வேண்டும் என சொன்னிங்கனா அதன்படி செய்து விடுவேன் என ஆடிட்டர் சொல்கிறார். பிறகு ஜீவானந்தம் மற்றும் பர்ஹானா இருவரும் கௌதம் பற்றி பேசுகிறார்கள்.

அந்த சமயத்தில் கௌதம் மீது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கா என கேட்கிறாள் உடனே பட்டம்மாள் விஷயத்தை டீல் செய்ய சொல்லி விட்டீர்களே என்றார் அவனுக்கு நான் ஒரு பரீட்சை வைத்து இருக்கிறேன் அதை அவன் செய்வதும் செய்யாமல் போவதும் அவன் கையில் தான் உள்ளது என்கிறார். மறுபுறம் குணசேகரன் வீட்டுப் பெண்கள் அனைவரும் ஒன்றாக வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஐஸ்வர்யா ஸ்கூல் போவது பற்றி பேசுகிறார்.

இவ்வளவு ஃபீஸ் கட்டி இவ்வளவு பெரிய ஸ்கூல்ல படிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை நான் கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போறேன் அப்பா பீஸ் கட்டல பெரியப்பா தானே பீஸ் கட்றாங்க அடிக்கடி அதை சொல்லி காட்டுவது எனக்கு பிடிக்கல தமிழ் தானே என்னோட தாய் மொழி அதை ஈஸியா நான் அடாப்ட் பண்ணிக்குவேன் எனக்கு புரிஞ்சு படிக்கணும் அதுதான் முக்கியம் இந்த வீட்டிலேயே எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துவிட்டது. இது சரியா வரும் என எனக்கு தோன்றுகிறது என ஐஸ்வர்யா கூற ஜனனியும் அவள் மிகவும் தெளிவாக பேசுகிறாள் அவளின் போக்கிலேயே விடலாம் என்று கூற ரேணுகாவும் அதற்கு சம்மதம் சொல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.