முதலிரவில் கரிகாலனை அலறவிட்ட ஆதிரை.. குணசேகருக்கு வைத்த ட்விஸ்ட்

ethir-neechal
ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனை விருப்பமில்லாமல் ஆதிரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இதனை அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்து எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. கரிகாலன் பார்க்க பாவமாக இருந்தாலும் நல்லவராக இருந்தாலும் ஆதிரைக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை எனவே வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைத்ததால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.

இவ்வாறு ஆதிரைக்கு விருப்பமில்லை என்றாலும் ஒரு பெண்ணை வற்புறுத்தக் கூடாது என்பதில் கரிகாலன் தெளிவாக இருக்கிறார். எனவே விருப்பமில்லாமல் கல்யாணம் செய்துக் கொண்ட ஆதிரையின் மனதை மாற்றி இடம்பிடிக்க வேண்டும் என நினைக்காத கரிகாலன் இவ்வாறு அலைந்து கொண்டிருப்பது எரிச்சலை தருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் அதிரை எவ்வளவு சொன்னாலும் கேட்காத குணசேகரன் முதலிரவுக்கு தயார் செய்கிறார். ஆனால் ஆதிரை ரூமுக்குள் போக முடியாது என அடம்பிடிக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் வலு கட்டாயமாக குணசேகரன் மிரட்டி அனுப்பி வைக்கிறார். பிறகு கரிகாலனை சமாளிக்க வேண்டும் என்பதற்காக அருணுக்கும் எனக்கும் எல்லாமே முடிந்து விட்டது என பொய் சொல்லி கரிகாலனை நம்ப வைக்கிறார்.

இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியான கரிகாலன் மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறார். மேலும் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் உனக்கு தான் அவமானம் மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்துக் கொள் என கரிகாலனை பயமுறுத்துகிறார். ஆதிரை இதன் காரணமாக யார் கேட்டாலும் நல்லபடியாக முதல் இரவு முடிந்து விட்டதாக சொல்ல வேண்டும் என சொல்கிறார்.

இவ்வாறு தற்பொழுது தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதிரை இப்படி பொய் சொல்லி இருக்கும் நிலையில் இது அருணுக்கு தெரிய வந்தால் ஆதிரையை ஏற்றுக் கொள்வாரா என தெரியவில்லை. பிறகு கடைசியாக ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வர அனைவரும் ஆதிரை கரிகாலன் இருவருக்கும் முதலிரவு முடிந்து விட்டதாக புரிந்து கொள்கின்றனர். இதனையடுத்து ஜீவானந்தம் அப்பத்தாவின் சொத்தை என்ன பண்ணப் போகிறார் என்பதை யோசிக்க இது குறித்து இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.