சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் எந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருப்பவர் தான் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் இந்த சீரியலில் படித்த பெண்களை தனக்கும் தனது தம்பிகளுக்கும் திருமணம் செய்து கொண்டு அடிமைகளாக நடத்தி வருகின்றனர்.
எனவே இவர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் அனைத்து மருமகள்களும் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்கள். இதனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் ஆடிட்டர் சொன்ன மாதிரி மருமகள்களிடம் கையெழுத்து வாங்கியதால் சக்தியிடம் வாங்க முடியாமல் குணசேகரன் தவித்து வருகிறார்.
இந்த விஷயத்தில் ஜனனி சூதனமாக இருந்ததால் குணசேகரன் மாட்டி விட்டுள்ளார் இதனை அடுத்து கௌதம் ஏதோ மறைக்கிறார் என்பதை கண்டுபிடித்த ஜீவானந்தம் கௌதமிடம் எப்படியாவது ஜனனியிடம் நல்ல தோழராக பழகி இன்னும் இரண்டு நாட்களுக்குள் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இதனால் கௌதம்க்கு ஜீவானந்தம் ஏதோ செக் வைத்திருப்பது தெரிய வருகிறது.
ஏனென்றால் ஜீவானந்திற்கு கௌதம் மேல் ஏற்கனவே சந்தேகம் இருந்து வரும் நிலையில் இனிமேல் அனைத்து விஷயங்களையும் தெரிந்துக் கொள்ள இருக்கிறார். அதாவது ஜனனியின் தோழர் கௌதம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது எனவே கௌதம்க்காக இந்த பிளானை போட்டு இருக்கிறார். கௌவுதம் ஜனனி என்னுடைய தோழியென கூறாமல் இருந்து வரும் நிலையில் புரியாத புதிராகவே இருக்கிறது.
இதனை அடுத்து அப்பத்தாவின் சொத்துக்களை ஜீவானந்தம் ரிஜிஸ்டர் செய்ய இருக்கும் நிலையில் இதனைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஜனனியிடம் கூறி உதவ வாய்ப்பு இருக்கிறது. மேலும் அப்பத்தாவிடம் குணசேகரன் தான் கையெழுத்து வாங்கி இருக்கிறார் என ஜனனி தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறார். மறுபுறம் கரிகாலனை மரியாதை இல்லாமல் பேசியதால் மகளை மன்னிப்பு கேட்க வேண்டும் என குணசேகரன் கூற ஆனால் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என சொல்லி விடுகிறார். உடனே இதற்கு குணசேகரன் ஞானத்திடம் இதற்கு ஏன் நம்ம மீசையை வைத்துவிட்டு முறுக்கி திரிஞ்சிகிட்டு அலைய வேண்டும் என்று நக்கலாக கூற இதோடு முடிவடைகிறது.