எதிர்நீச்சல் சீரியல் ஆதிரைக்கு திருமணம் ஆயிடுச்சா.? கணவர் யார் தெரியுமா? புகைப்படம் இதோ..

ethir neechal

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சீரியல்களின் மூலம் அறிமுகமாகும் அனைத்து பிரபலங்களும் தங்களுடைய முதல் சீரியலிலே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து விடுகிறார்கள் மேலும் இவர்களுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகிவிடுகிறது.

அந்த வகையில் மக்கள் விரும்பும் வகையில் சுவாரசியமான சீரியலை ஒளிபரப்பாக வருவதில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சிதான் சன் டிவி. சன் டிவி சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் நன்றாக படித்திருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டு வீட்டில் மிகவும் அடிமையாக நடத்தி வருகிறார்கள் இவ்வாறு இப்படிப்பட்ட கணவர்களை மீறி சுதந்திரமாக தனக்கு பிடித்தவற்றை செய்து தைரியமாக வாழ வேண்டும் என்பதனை அனைத்து பெண்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது.

அப்படி இந்த சீரியலை பார்த்துவிட்டு ஏராளமான பெண்கள் மாறி இருப்பதனால் பலரும் இந்த சீரியலினை நிறுத்த வேண்டும் என்பதற்காக இயக்குனரிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இயக்குனரோ தொடர்ந்து அடுத்தடுத்த திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஆதிரையின் திருமணம் அருணுடன் நடைபெறுமா? ஜனார்த்தனன் யார்? அப்பத்தாவின் சொத்தை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள் என்பதை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜகார்த்தனனாக இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.

இவ்வாறு தற்பொழுது ஆதிரையின் திருமணத்தை வைத்து தான் இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆதிரையின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆதிரையாக நடித்துவரும் நடிகையின் உண்மையான பெயர் சத்யா தேவராஜன் ஆவார். இதோ அவருடைய திருமண புகைப்படங்கள்..

sathya devarajan
sathya devarajan