Ethirneechal serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் பலமுறை டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து பாப்புலரான சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் ரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயமானவர்கள்.
குறிப்பாக குணசேகரன் கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார் மாரிமுத்து. இவர் அண்மையில் தான் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.. அதனால் தற்பொழுது குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை தேடி வருகின்றனர்.
அதுவரை எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு எங்கேயோ சென்று விட்டதாக கதைகளம் நகர்ந்து வருகிறது.. இந்த நிலையில் அடுத்து குணசேகரன் கதாபாத்திரத்திற்கு யார் நடிக்க வருவார் என ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் சீரியலை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் தற்போது இந்த சீரியலில் நந்தினி சமையல் செய்யும் இடத்தில் ஒருவர் குடுத்த அட்வான்சை திரும்ப கேட்டு வருகிறார். அதற்கு பணத்துக்கு பதில் இந்த தாலியை இப்போதைக்கு வச்சுக்கோங்க என நந்தினி தாலியை கழட்ட, புருஷன் குத்துக்கல்லு மாதிரி இருக்கான் அவன் முன்னாடியே தாலிய கழட்டுறியே என மாமியார் நந்தினியை ஓங்கி அறைகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.. மாரிமுத்து ரூ 22,000, கனிகா ரூ 12,000, காயத்ரி கிருஷ்ணன் ரூ 6500, விமல் ராஜ் ரூ 9000, சத்யா தேவராஜ் ரூ 7500, ரித்திக் ராகவேந்திரா ரூ 3500, விபுராமன் ரூ 12000, ஹரிப்ரியா ரூ 15,000, கமலேஷ் ரூ 10,000, பிரியதர்ஷினி ரூ 10,000, சபரி ரூ 10,000 மதுமிதா ரூ 15,000, சத்யபிரியா ரூ 12,000 என வாங்குகின்றனர்..