சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இதற்கு மேல் ஜீவானந்தம் குணசேகரன் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகும் நிலையில் ஜனனி டம்மி பீஸ்சாக இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோக்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் லாஜிக்கே இல்லாமல் கதை இருப்பதாக கூறி வருகின்றனர்.
தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் இந்த சீரியல் சமீப காலங்களாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது நேற்று ஆதிரையை மாடியில் இருந்து கதிர் மற்றும் குணசேகரன் கூப்பிட போது நந்தினி ஆதிரையை தடுத்து நீ மேல போக வேண்டாம் என்ன தான் நடக்கும் என்று இன்னைக்கு பார்த்திடலாம் உன் மேல ஏதாவது கை மட்டும் வைக்கட்டும் அதுக்கப்புறம் இங்க நடக்கிறதே வேற எனக் கூறுகிறார்.
எனவே இதனால் ஆதிரையும் போகாமல் இருப்பதால் கோபத்தில் கதிர் கீழே வந்து தரதரவென்று பிடித்து வெளியே துரத்தி விடுகிறார். இதனால் என்ன தான் நடக்கப் போகிறது என்பதை நந்தினி வேடிக்கை வேடிக்கை பார்க்கிறார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை ஆதிரைக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டது தான் மிச்சம்.
இதனை அடுத்து ஆடிட்டர் குணசேகரன் வீட்டிற்கு வந்து சொத்து உங்களை விட்டு எல்லாம் போய்விட்டது உங்க கம்பெனியில் ஜீவானந்தம் வந்து உங்க வேலையாட்களை எல்லாம் வெளியே துரத்தி விட்டார் என்று கூறுகிறார். இதனை எல்லாம் கேட்ட பிறகு கோபத்தில் குணசேகரன் ஆபீஸ்க்கு செல்கிறார். பிறகு ஜனனி அப்பத்தா ரூம்க்கு சென்று அந்த ஜீவானந்தம் யார் சொல்லுங்க என உலுக்கி எடுக்கிறார்.
பிறகு ஈஸ்வரி ஜீவானந்தம் குணசேகரின் நாளாக தான் இருப்பார் அவர்தான் ஏதோ கேம் விளையாடுகிறார் நாம் அனைவரும் இனிதான் உஷாராக இருக்க வேண்டும் என கண்டதையும் சொல்ல பிறகு ஜனனியும் ஆபீஸ் இருக்கு செல்கிறார். இவ்வாறு மருமகள்கள் அனைவரும் முட்டாளாக இருந்து வரும் நிலையில் என்னதான் நடக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.