சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை கண்டுவரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படத்தை பாண்டியராஜ் தனக்கே உரிய பாணியில் குடும்பம் சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்த படமாக எடுத்திருந்தார் படம் குறிப்பாக பாலியல் தொல்லை குறித்த படமாக எடுக்கப்பட்டு இருந்தது.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து புகழ், சூரி, சத்யராஜ் திவ்யா துரைசாமி, பிரியங்கா அருள் மோகன், கலக்கப்போவது யாரு தங்கதுரை மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். படத்தில் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் மக்கள் இது போன்ற கதைகள் உள்ள படங்கள் பலவற்றை பார்த்து உள்ளதால் இந்த திரைப்படத்தை..
பெரிய அளவு மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை என ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. அந்த காரணத்தினால் பெரிய அளவில் மக்கள் திரையரங்கம் போகவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வந்தாலும் தற்போது நாட்கள் கடந்து போக போக பொதுமக்கள் இந்த திரைப்படத்தை பெரிய அளவு கண்டு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் படுதோல்வி என பலர் கூறி வருகின்றனர். எதிர்பார்த்த அளவிற்கு சொல்லவில்லையாம் தமிழகத்தில் இதுவரை சுமார் 30 கோடி வசூலை கூட எட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
படத்தின் கதை களம் சற்று வித்தியாசமாக இருந்திருந்தால் இந்த திரைப்படம் நிச்சயமாக ஒரு பிளாக்பஸ்டர் படம் மாதிரி இருக்கும் என்பது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.