நடிகர் சூர்யா ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் உடன் கைகோர்க்கும் சூர்யா நடித்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் பாலியல் தொல்லையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
அதேசமயம் சென்டிமென்ட், ஆக்சன் சீன்கள் இடம் பெற்ற உள்ளதால் படம் ரசிகர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது. மேலும் படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால் நாளுக்கு நாள் இந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தியுள்ளனர். படம் சிறப்பாக இருந்தாலும் வசூல் மட்டும் எதிர்பார்த்த அளவிற்கு அள்ளவில்லை என ஒரு குற்றச்சாட்டு வந்த வண்ணமே இருக்கிறது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாகவும் உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவருகின்றன அப்படிப் பார்க்கையில் சூர்யாவின் முந்தைய படமான காப்பான் திரைப்படத்தின் வசூலை கூட இந்த திரைப்படம் தொடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் துணிந்தவன் பட இயக்குனர் பாண்டியராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நாங்கள் நினைத்தோம் யாருக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ அவர்களை மிக சிறப்பாக போய் சேர்ந்திருக்கிறது படம் பார்த்துவிட்டு மக்களிடமிருந்து வரும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் எனக்கு மட்டுமல்ல படக்குழுவும் மகிழ்ச்சிதான் என தெரிவித்தார்.