தமிழ் சினிமா உலகில் எப்பொழுதும் கமர்சியல் படங்களை கொடுத்து அசத்துவார் இயக்குனர் பாண்டியராஜ். முதலில் பாண்டியராஜ் சசிகுமாரின் தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலம் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அதன்பின் இவர் பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து தற்போது டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் இப்போது சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இந்த திரைப்படம் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது இந்த படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், திவ்யா துரைசாமி, சுப்பு பஞ்சு, இளவரசு, தேவதர்ஷினி, வினய் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.
இந்த படம் முழுக்க முழுக்க பாலியல் தொல்லையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டு இருந்தது இந்த படம் வேற லெவெலில் இருக்கிறது. தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் சமீபத்தில் வெளியாகியது. இப்படி இருக்கின்ற நிலையில் விமர்சனம் என்ற பெயரில் ப்ளூ சட்டை மாறன் எதற்கும் துணிந்தவன் படத்தை நார்நாராகக் பிரித்தெடுத்தார்.
இந்த பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தால் மக்களுக்கு பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்திருக்கும் ஆனால் இவர்கள் அதை விட்டு ஹீரோ, ஹீரோயின் காதல் செய்வது, நடனமாடுவது, காமெடி என்ற கதையை வேறு டிராக்டரில் கொண்டு சென்றதால் படம் பாய் போட்டு படுத்து விட்டது என்றே சொல்லலாம் மொத்தத்தில் படம் மக்களுக்கு சலிப்பை உண்டாக்கிவிட்டது.bஎன்று பயங்கரமாக விமர்சித்திருந்தார் இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியது கேவலமாக திட்டி அதில் வரும் பணம் சம்பாதிக்கிறார்கள். உங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் அந்த காசில் தான் சாப்பிடுகிறார்கள் வெட்கப்பட மாட்டிங்களா இப்படி பேசினால் உங்களுக்கு கோபம் வருமா வராதா நீங்கள் சினிமாவை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சினிமாவை நம்பித்தான் இருக்கிறீர்கள் அப்போ சினிமாவில் மரியாதை கொடுக்க வேண்டுமா.. இல்லையா.. ப்ளூ சட்டை மாறன் விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து பேசியிருந்தார்.