பீஸ்ட் KGF-2 கொண்டாட்டத்திற்கு முன்பு வெளியாகும் சூர்யாவின் திரைப்படம்.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

suriya-beast
suriya-beast

சூர்யா, பிரியங்கா மோகன், நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது இமான் இசையில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  ஆனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக இழுத்துப் பிடித்தது. இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட் ப்ளிக்ஸ் ஆகிய OTT தளங்களில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்தது இப்படி சமூகம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் இந்த கருத்து அனைத்து குடும்பத்தாருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நிலையில் OTT வெளியிட இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் OTT யில்  பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது . சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நேரடியாக காளையுடன் சூர்யா மொத இருக்கிறார் என தகவல் கிடைத்தது அதனால் சூர்யா பயிற்சி பெற்று வருகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் இசை ஆல்பத்தை முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொள்கிறார்கள் எனவும் வாடிவாசல் திரைப் படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

beast kgf etharkum thuninthavan
beast kgf etharkum thuninthavan