நடிகர் சூர்யாவின் படங்கள் சமீபகால OTT தளத்தில் வெளியாகிய நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் திரையரங்கம் பக்கமே படம் வெளியாக இருக்கிறது ஆம் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று கோலாகலமாக உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
தமிழை தாண்டி கேரளா உட்பட பல்வேறு இடங்களிலும் இந்த படம் ரிலீசாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருந்தாலும் உள்ளூரில் பெரிய அளவிற்கு துணிந்தவன் படம் திரையரங்கை கைப்பற்றவில்லை என கூறப்படுகிறது. அதற்கு காரணம் பல்வேறு காரணம் சொல்லப்படுகிறது ஒரு பக்கம் அஜித்தின் வலிமை திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து இப்பொழுதும் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் எதற்கும் துணிந்தவன் படத்தை கைப்பற்ற யோசிக்கின்றனர்.
மறுபக்கம் அரசியல் ரீதியாக அவருக்கு அடுத்தடுத்த குடைச்சலை கொடுத்து வருவதால் ஒரு சில திரையரங்குகளில் வெளியிட மறுக்கின்றன. மறுபக்கம் சூர்யாவின் ஜெய்பீம், சூரரைபொற்று ஆகிய திரைப்படங்களை திரையரங்க உரிமையாளர்கள் திரையில் தான் வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவரோ OTT தளத்திற்கு கொடுத்தது திரையரங்க உரிமையாளர்களை பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது.
இதனால் காரணமாகவோ என்னவோ திரையரங்கம் இவர் இதே படத்தை கைப்பற்ற யோசிப்பதாக கூறப்படுகிறது இப்படி அடுத்தடுத்த சிக்கல்களை வைத்து உள்ளதால் எதற்கும் துணிந்தவன் படம் நன்றாக இருந்தால் கூட தியேட்டரில் கைப்பற்றுவது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக எழும்பி உள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு புதிய படங்களும் வெளியாகின்றன.
அந்த வகையில் நாளை பிரபாஸ் நடிப்பில் வெளிவரவுள்ள ராதே ஷ்யாம், மார்ச் 25 இல் ராஜமௌலியின் RRR படமும் ரிலீசாகிறது. இதனால் பெருமளவு ஆதரவு தற்போது எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இல்லாமல் போய்விட்டது இருப்பினும் படம் ரிலீசாகி வெற்றி பெறும் பட்சத்தில் பல திரையரங்கை கைப்பற்றும் என நம்பிக்கையில் படக்குழுவும் காத்துக் கொண்டிருக்கிறது. பார்க்கலாம் சூர்யாவிற்கு இது நல்லாத்தாக அமையும் என்று பார்க்கலாம்.