எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவை புரட்டி எடுக்கப்போகும் வில்லன் இந்த சிறுவனா..? எதிர்பார்ப்பை எகிறவைத்த படக்குழுவினர்கள்..!

surya-edharkkum-thuninthavan

etharkkum thuninthavan movie villain latest update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு  வருவதற்கு தயாராகி கொண்டிருக்கிறது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் தான் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் டி இமான் இசையமைத்துள்ளார் கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையும் நிலையில் உள்ளது மீதமுள்ள படைப்பானது  சென்னையில்  படமாக்க உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யாவை புரட்டி எடுக்க போகும் வில்லன் கதாபாத்திரம் பற்றிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அவர் யார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்த நிலையில் அதற்கான விடை தெரிந்துள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது இளம் நடிகர் சரண் தான் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க போகிறாராம். மேலும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்முருகன் அவர்கள் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி இளவரசு போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் கூட சரண் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார் அதன்பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தம்பியாக நடித்து மிரட்டி இருப்பார்.

saran-1
saran-1

அந்த வகையில் சமீபத்தில் கூட நயன்தாரா நடிப்பில் வெளியான நேற்றிகன் திரைப்படத்திலும்  இவர் நயன்தாராவிற்கு  தம்பியாக நடித்து இருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல். சூர்யாவுக்கு தற்போது வில்லனாக களம் இறங்க உள்ளதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.