ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி நடிகை அணுவா இது.! என்ன இப்படி மாறிட்டாங்க.! வேற லெவல் புகைப்படம்

anu
anu

விஜய் டிவியில் வித்தியாசமான கதை உள்ள குடும்பப்பாங்கான பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை அனு.

இந்த சீரியல் மிகவும் சுறுசுறுப்பாக போக இவரும் ஒரு காரணமாவார். ஏனென்றால் வில்லி கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது இந்த சீரியலில் அனு தானாக தற்கொலை செய்துகொண்டு ஹீரோவின் மீது பழி போட்டு உள்ளார். எனவே ஹீரோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை அனு சன் டிவியில் புதிதாக ஒரு நாடகத்தில் கமிட்டாகி உள்ளாராம். அந்த சீரியலில் அணு எந்த வேடத்தில் நடிக்கிறார் என்ற ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தில் கல்யாண பெண் போல் காட்சியளிக்கிறார் அணு. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஈரமான ரோஜாவே வில்லி அணுவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

anu
anu