Eramana Rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தனது அப்பாவின் பேச்சைக் கேட்டு அர்ஜுன் சக்தியை வேண்டாம் என கூறிவிட்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜீவா, காவியா தங்களது காதலை மறைத்தது போலவே அர்ஜுன் சக்தியும் தங்களது காதலை மறைத்து வந்தார்கள். இவர்களுடைய காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரியாத காரணத்தினால் இருவருக்கும் வேறு வேறு நபருடன் திருமணம் ஏற்பாடுகளை செய்தார்கள்.
அப்படி மிகவும் பிரம்மாண்டமாக திருமண வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சக்தி மிகவும் சோகமாக இருப்பதை தெரிந்துக் கொண்டு காவியா, பிரியா இருவரும் சக்தியிடம் காதலிப்பது குறித்து கேட்கின்றனர். இந்த நேரத்தில் இவர்களுக்கு சக்தி அர்ஜுன் இருவரும் காதலிப்பது தெரிய வருகிறது.
எனவே உடனே திருமணத்தை நிறுத்திவிட்டு பிரியா, காவியா சக்தியை அழைத்துக்கொண்டு அர்ஜுனுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகிறார்கள். இந்த நேரத்தில் ஜீவா, பார்த்திபன் மற்றும் இவர்களுடைய அப்பாவிற்கு அர்ஜுன் சக்தி காதலிப்பது தெரிய வந்தாலும் ஐஸ்வர்யாவுடன் நடைபெற இருக்கும் இந்த கல்யாணம் நின்று விட்டால் நான் இறந்து விடுவேன் என கூறி மிரட்டுகிறார்.
எனவே வேறு வழியில்லாமல் அர்ஜுனும் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள பிறகு அர்ஜுன், ஐஸ்வர்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிய இந்த நேரத்தில் சரியாக காவியா, பிரியா சக்தியை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு வருகிறார்கள்.
இதனை அடுத்த தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோபில் பிரியா இந்த அர்ஜுன் என்னுடைய தங்கச்சியை காதலிச்சிட்டு வெளியில சொல்ல தைரியமில்லாமல் கொழ மாதிரி ஐஸ்வர்யா கழுத்துல தாலி கட்டிருக்கான், இந்த திருமணம் செல்லாது என்று கூறுகிறார். இதற்கு ஐஸ்வர்யாவின் அம்மா உங்க வீட்டு பொண்ணு வேணா அர்ஜுன லவ் பண்ணி இருக்கலாம் ஆனால் அர்ஜுன் சக்திய லவ் பண்ணல என்று கூறுகிறார்.
இதனை எல்லாம் கேட்டு விட்டு அனைவரும் அதிர்ச்சியாக பிரியா அர்ஜுனிடன் சக்தி மட்டும் தான் உன்ன லவ் பண்ணாலா, நீ லவ் பண்ணலையா என்று கேட்கிறார். இதற்கு சக்தி அர்ஜுன் நான் மட்டும் தான் உன்ன லவ் பண்ணுனனா நீ என்ன லவ் பண்ணலையா சொல்லுடா ப்ளீஸ் டா என கெஞ்சி காதறுகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.