ஏய், காவியா இது புருஷன் பொண்டாட்டி சண்டை எங்களுக்குள்ள நீ வராத என எச்சரித்த ஜீவா.! அசிங்கப்படும் தங்கச்சிக்கு ஆதரவாக பேசாத பிரியா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருவதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் தங்களுக்கு பார்த்திருந்த அக்கா, தங்கை மணப்பெண்களை மாத்தி மாத்தி திருமணம் செய்து கொண்ட நிலையில் குடும்பமே குழப்பத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் ஜீவா, காவியா இருவரும் காதலித்தது பார்த்திபன் பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபனை காவியா ஏத்துக்கொண்டார் ஆனால் காவியாவை பிரிய வேண்டும் என பார்த்திபன் முடிவெடுத்த நிலையில் பிறகு விவாகரத்து வரை சென்றார்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி இவர்களுக்கு மீண்டும் திருமணம் நடக்கப்பட்டது.

இந்த நேரத்தில் பார்த்திபனின் அத்தை எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தனது பெண்ணுடன் பார்த்திபனுக்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக ஜீவா காவியா காதலித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போட்டு காண்பித்தார்கள். எனவே இதனால் பார்த்திபன், பிரியா இருவருக்கும் இவர்கள் காதலித்து பெரிய வந்த நிலையில் பிரியா சுக்கு நூறாக உடைந்துவிட்டார்.

ஆனால் பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொண்டது போல் அனைவர் மத்தியிலும் நடித்துவிட்டு ஆனால் மனசார இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை அனைவருக்கும் முன்பும் காவியாவை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வருகிறார். பிரியா, ஜீவாவை வேண்டாம் என கூறிவிட்டு தனது வீட்டிலிருந்து வரும் நிலையில் எப்படியாவது பிரியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக ஜீவா பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அதற்காக பிரியாவின் வீட்டிற்கு முன்பு டெண்டு ஒன்றை போட்டு தங்கி இருக்கிறார் இப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மழை அதிகமாக பெய்ததால் ஜீவாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. எனவே ஜீவா ஆவி பிடித்துக் கொண்டிருக்க இதனை பார்த்த ப்ரியா நீங்கள் என்னதான் செய்தாலும் என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் மாறினாலும் நான் மாற மாட்டேன் என சொல்கிறார்.

இந்த நேரத்தில் காவியா வந்து பிரியாவிடம் ஜீவா தான் அனைத்திருக்கும் மன்னிப்பு கேட்டுவிட்டார்ல ஏன் ஏத்துக்க மாட்டேங்குற என கேட்க அதற்கு ஜீவா ஏய் காவியா இது புருஷன் பொண்டாட்டி சண்டை எங்களுக்குள் நீ வராத என எச்சரிக்க இதற்கு பிரியா எதுவும் பேசாமல் அமைதியாகிறார்.