தனி குடுத்தனம் வர மறுத்த ஜீவாவிற்கு ட்விஸ்ட் வைத்த பிரியா.. வைரல் ப்ரோமோ

விஜய் டிவி ஒளிபரப்பாக வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான செய்திகள் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் மொத்த குடும்பத்தையும் பிரித்து தவிக்க விட வேண்டும் என்பதற்காக தேவி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அப்படி முதல் கட்டமாக பிரியாவின் பலவீனத்தை பகடைக்காயாக வைத்துக்கொண்டு ஜீவாவை தனி குடுத்தனம் அழைத்து செல்வதற்காக தொடர்ந்து அறிவுரை கூறிய வருகிறார். அதாவது ஜீவா காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இதனைப் பற்றி தெரிந்த பிறகு தற்பொழுது வரையிலும் பிரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சித்தாலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது எனவே வேறு வழியில்லாமல் பிரியா ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். எனவே பிரியா இதனை பற்றி ஜீவாவிடம் கூற முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

மேலும் பிரியா காவியாவிடம் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனி குடுத்தனம் செல்ல இருப்பதாக சொல்ல அவரும் மறுத்து விட இறுதியாக தனது மாமனார் மாமியாரிடம் கூறுகிறார். அவர்களும் தனது மகனை என்னிடமிருந்து பிரித்து விடாத மா என கெஞ்சுகிறார்கள். ஆனால் காதலித்த இருவரும் ஒரே வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கு என்னை மன்னித்து விடுங்கள் என சொல்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனி குடுத்தனம் போக வேண்டும் என பிரியா சொல்ல அதற்கு ஜீவா எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு என்னால் வர முடியாது என சொல்ல அதற்கு அப்ப நான் நானும் சொல்றேன் நீங்க வரலைன்னா நான் தனியா வீடு ஒன்றை எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் என சொல்ல இந்த நேரத்தில் தேவி கைத்தட்டி நீ சரியான முடிவு எடுத்திருக்க நீ எடுத்தது தான் சரி என சொல்ல ஜீவா தேவியை முறைக்கிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.