விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் ஜேகே ஒரு அனாதை என தேவி கூறும் நிலையில் ஜேகே வின் வளர்ப்பு அப்பா அவன் அனாதை கிடையாது எனக் கூற அனைவரும் ஜேகேவின் அப்பா யார் என சொல்லுமாறு கேட்கிறார்கள். பிறகு ஜேகே வேறு யாரும் கிடையாது பிரபல தொழிலதிபர் ஆதிகேசவன் லட்சுமி அவங்களுடைய ஒரே பையன் தான் ஜேகே எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
தேவி என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார். பிறகு அனைவரும் அவர் பெரிய பிசினஸ்மேன் ஆச்சே அவர் தமிழ்நாட்டுல மட்டுமல்ல இந்திய அளவிலும் பெரிய பிசினஸ்மேன் பணத்துக்கு ஆசைப்பட்டு அவரையும் அவருடைய மனைவியையும் யாரோ கொலை செஞ்சுட்டாங்க எனவே யாருக்கும் தெரியாம இவன நாங்க தத்தெடுத்தும் வளர்த்தோம் ஆனால் இன்னைக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு ஆதிகேசவன் லட்சுமி இருவரையும் கொன்னது யாருன்னு தெரியாது அப்போ இவன் சின்ன பையன் எனவே இவனையும் ஏதாவது செஞ்சுடுவாங்களோனு பயந்து தான் வெளிநாட்டிலேயே வளர்த்தோம் தற்பொழுது வரையிலும் யார் அவர்களை கொன்னது என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை ஒரே மர்மமாகவே இருக்கிறது என கூற தேவி ஆதிக்கேசவனையும் லட்சுமியையும் கொன்னது நானும் பாஸ்கர் அண்ணனும் தானே என மனதிற்குள் நினைத்து பயப்படுகிறார்.
என் அப்பா அம்மாவை கொலை பண்ணிட்டாங்களா இதை ஏன் முன்னாடியே சொல்லல என ஜேகே கோபப்படுகிறார். பிறகு தேவி இவ்வளவு பெரிய கோடிஸ்வரன் பையன தான் நம்ப பொண்ணு கட்டி இருக்கா இவனுக்கு தெரிஞ்சிடுச்சா நம்பல சும்மா விட மாட்டாங்க இப்ப என்ன பண்றது என யோசிக்க ஜேகே நீங்க சொல்றத நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல என கோபப்பட்டு கிளம்புகிறார். இதனை அடுத்து தேவி ஜேகேவை நீங்க தாராளமா லண்டனுக்கு கூட்டிட்டு போலாம் ஆனால் அதற்கு முன்னாடி என்னோட பொண்ணுக்கு டிவோர்ஸ் தர சொல்லிட்டு போங்க என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு ஜேகே வளர்ப்பு அப்பா கிளம்ப அனைவரும் தனது மகனை நல்லபடியாக பாத்து கொள்ளுமாறு கூறுகிறார். பிறகு ஜேகே அழுது கொண்டிருக்க பிரியா உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைச்சு வருத்தப்படாதீங்க அம்மாவா அப்பாவா நல்ல பிரண்டா உங்களுக்கு நான் இருப்பேன் என சொல்ல ஜேகே உங்க அம்மா நான் அனாதை என சொன்ன பொழுதே செத்துட்டேன் ஆனால் நீ இப்ப பேசும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வருவது போல் நினைப்பதாக கூற தோலில் சாய்ந்து கொண்டு அழுகிறார். மறுபுறம் பிரியா வருத்தமாக நிற்க இதனை பார்த்த ஜீவா உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க நைட் என்ன திட்டுனது நினைச்சு கவலைப்படுறீங்களா எனக் கேட்க அப்படி எல்லாம் கிடையாது ஜேகேக்கு அப்பா அம்மா இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன் ஒருத்தவங்க மேல நம்ம நம்பிக்கை இருக்கும் பொழுது அவங்க நம்மளை ஏமாத்துனா எவ்வளவு வலிக்கும் என சொல்ல பிறகு இதற்கு மேலாவது எனக்கு நீங்க உண்மையா இருப்பீங்க என நம்புகிறேன் என்ன சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
காலையில் எழுந்தவுடன் அனைவரும் கோவிலுக்கு சென்று அன்னதானம் மற்றும் பூஜை செய்வதற்காக செல்கிறார்கள் அங்கு பிரியா மட்டும் காரில் இருந்து இறங்காமல் இருக்க ஜீவா எல்லாரும் போய்ட்டாங்க வாங்க போகலாம் என கூற உங்க கூட வரணும்னு நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு என சொல்கிறார். இந்த பிரச்சனை எல்லாம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் பொது இடத்தில் வேண்டாம் வாங்க போகலாம் என கூற பிறகு சாமி கும்பிடுகிறார்.
இவர்களுக்கு முன்பு ஜீவா உடைய அம்மா அப்பா நடந்து செல்ல காவியா கர்ப்பம் ஆனால் இதை செய்யணும் வேண்டிகிட்ட அதே போல் பிரியாவும் கர்ப்பமானால் இதனை செய்ய வேண்டும் எனக் கூற பிரியா ஜீவாவை முறைக்கிறார். பிறகு சாமியாரிடம் சென்று பேசிக் கொண்டிருக்க பார்த்திபனையும் காவியாவையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதன் பிறகு ஜீவாவை காமித்து யார் என கேட்க இவங்க தான் ஜீவா பிரியா என்னுடைய சின்ன பையன் மருமகள் என சொல்ல நீங்களும் கூடிய சீக்கிரத்துல நல்ல விஷயத்தை சொல்லுங்க சிறப்பா பூஜை செய்து விடலாம் என கூற அப்பொழுதும் பிரியா ஜீவாவை முறைக்க இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.