விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியலில் பிரியா ஜீவாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மேலும் பிரியா அமைதியாக இருந்தாலும் ஜீவாவின் அத்தை தேவி அதை இதையும் சொல்லி ஏற்றி விடுகிறார்.
பிறகு ஒரே வீட்டில் காதலித்த இருவரும் இருக்கிறார்கள் எனவே எப்படி ஒருவரை ஒருவர் மறந்துவிட்டு வாழ்வாங்க எனவே ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக் குடுத்தனம் போய்விடு என பிரியாவிடம் தேவி சொல்ல இதனை ஏற்றுக்கொண்ட பிரியா எப்படியாவது ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவிலிருந்து வருகிறார்.
இதனைப் பற்றி ஜீவாவிடம் சொல்ல அதற்கு ஜீவா முடியாது என சொல்லிவிடுகிறார் பிறகு காவியாவிடம் நான் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக் குடுத்தனும் போகலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற என கேட்க இல்லை அத்தை மாமா இத சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க எனவே தனி குடுத்தனம் போக வேண்டாம் என சொல்ல ஜீவாவும் இதேதான் சொல்றாரு என்ன ஆனாலும் ஜீவாவை தனி குடுத்த அழைத்துக் கொண்டுதான் போவேன் என கூறி விடுகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியா கோவிலுக்கு சென்று விட்டு வர ஜீவாவின் அம்மா அப்பாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் ஜீவாவுடன் தனி குடுத்தனம் போகலாம்னு இருக்கிறேன் மாமா என்று சொல்ல என்னம்மா சொல்ற என கேட்க அதற்கு பிரியா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்ச இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறது எனக்கு நெருடலா இருக்கு அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என சொல்கிறார்.
இதற்கு ஜீவாவின் அம்மா என்னால இதை ஏத்துக்க முடியாது என்னுடைய பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதம்மா என அழுக அதற்கு என்ன மன்னிச்சிடுங்க காவியா இருக்கிற வீட்ல என்னால இருக்க முடியாது என கூறிவிட்டு பிரியா கிளம்பி விடுகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.