பிரியாவிடம் கண்ணீருடன் காலில் விழாத குறையாக கெஞ்சும் ஜீவா.! உண்மையைக் கூறி பார்த்திபன் தலையில் இடியை இறக்கும் அவரின் அத்தை.! வெளியானது ஈரமான ரோஜாவே ப்ரோமோ வீடியோ.!

eeramana-rojave
eeramana-rojave

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அதிலும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களுடன் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை எபிசோடில் பார்த்திபனுக்கும் காவியாக்கும் நடந்து கொண்டிருக்கும் ரிசப்ஷனுக்கு பார்த்திபனின் அத்தை வந்து பென்டிரைவை கொடுத்து அங்கேயே போட சொல்லுகிறார். அந்த வீடியோவில் காவியாவும் ஜீவாவும் காதலித்திருக்கின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரிய வந்து விடுகிறது உடனே காவியா பாட்டியின் அத்தை காலில் விழுந்து வீடியோவை நிறுத்த சொல்லுங்கள் என கதறுகிறாள்.

மேலும் அதனைத் தொடர்ந்து  காவியாவின் கழுத்தில் இருக்கும் மாலையைப் பித்து எரிந்து  என் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டு நீங்கள் நாலு பேரும் சந்தோஷமாக வாழ முடியுமா குற்ற உணர்ச்சியோடு இனிமேல் எப்படி வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என கூறுகிறார்.

மேலும் அது மட்டுமில்லாமல் பார்த்தியிடம் இவள் தாலியை பிச்சி எறிந்து விட்டு  என் மகளோடு வாழப் போகிறாயா அல்லது இவளுடன் குற்ற உணர்ச்சியுடன் இருக்கப் போகிறாயா என தெரிந்து விட்டு தான் நான் இங்கிருந்து போவேன் எனக் கூறுகிறாள்.

ஈரமான ரோஜாவே இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகியது அதில் பார்த்திபனின் அத்தை பார்த்திபனை பார்த்து இப்படி ஒரு நம்பிக்கை துரோகியோட வாழ போறியா இல்ல என் மகளோடு வாழ போறியா என கேட்கிறார். உடனே அடுத்த காட்சியில் ஜீவாவின் அப்பா பதற்றமாக ஓடிவந்து ஜீவாவிடம் பிரியா எங்கேயோ கிளம்பி போறா அவளை முதல்ல கண்டுபிடி எனக் கூறுகிறார் உடனே ஜீவா பதறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். பிரியாவை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வா என ஜீவாவின் அப்பா கூறுகிறார் ஜீவாவிடம்.

பிரியாவை கண்டுபிடித்து ஜீவா பிரியாவிடம் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு பிரியா என கெஞ்சுகிறார். உடனே பிரியா   காவியா கஷ்டப்பட்டா நீ கண்ணீர் வடிப்ப  காவியா சந்தோஷமா இருந்தா நீ என்கிட்ட வந்து சிரிப்ப எனக்காக நீ ஒரு விஷயமாவது செஞ்சி இருக்கியா  முழுக்க முழுக்க காவியாவோட பிரதிபலிப்பா தான் நீ என்கிட்ட நடந்துக்கிற. உடனே ஜீவா ப்ளீஸ் பிரியா என கண்ணீருடன்  கும்பிடுகிறார்.

பின்னணியில் ஓ மனமே என்ற பாடலும் ஒலிக்கிறது இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.