ஈரம் படத்தில் நடித்த நடிகை திருமணத்திற்கு பிறகுஆளே மாறிப் போய் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

eeram movie
eeram movie

2009ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடசலம் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஈரம் இந்த  திரைப்படத்தில் ஆதி நந்தா, சிந்து மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் மனநோய் கொண்ட கணவன் தன்னுடைய மனைவியை கொன்று விடுகிறான் அதன்பிறகு மனைவி ஆவியாக தன்னை கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களை தண்ணீர் உருவத்தில் பழி  வாங்குவதே ஈரம் திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் நடித்த சிந்து மேனன் சிறுவயதிலிருந்தே பரத நடன கலையை கற்றுக் கொண்டவர்.

இவர் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் சினிமா துறையில் முதன்முதலாக ராஷ்மி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதேபோல் தமிழில் முதன்முதலாக சமுத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மேலும் தமிழில் யூத், கடல் பூக்கள்  ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் மலையாளம் ,கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகுதான் 2009ஆம் ஆண்டு ஈரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

eeram movie actress
eeram movie actress

தொடர்ந்து நடித்து வந்த சிந்து மேனன் அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது அதனால் சின்னத்திரைக்கு வந்தார் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் இதனை தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வந்தார். பின்பு ஒரு காலகட்டத்தில் 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு இலண்டனில் செட்டிலாகிவிட்டார்.

eeram movie actress
eeram movie actress

தற்பொழுது தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

eeram movie actress
eeram movie actress