விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை இரண்டு சீசன்களில் மிகவும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் சந்தோஷ் பிரதப்.
இவர் தாயம், ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு வெளியான சாப்பாடா பரம்பரை என்ற படத்தில் ராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவரது பிசாசு 2, மீண்டும் வா அருகில் வா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் குக் வித் கோமாளி சீசன் 3-யில் குக்காக பங்குபெற்றார். இதனைத் தொடர்ந்து போலீஸ் டைரி 2.0, குருதி களம், ஆனந்தம் ஆரம்பம் உள்ளிட்ட வெப் தொடரின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
இந்த வெப் சீரியல் டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது.மேலும் இந்த சீரியலில் ராக்ஸ்டார் அசோக் கேரக்டரில் நடித்துள்ளார். இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் திரைப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் இவ்வாறு சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.