உன்ன விடறதா இல்ல.. விஜய் உடன் மீண்டும் போதும் அஜித்.! வெற்றி யார் யாருக்கு..

Ajith
Ajith

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய் பல தடவை நேருக்கு நேர் மோதி உள்ளனர். அதில் விஜய் அதிக தடவை ஜெயித்திருந்தாலும் சமீபகாலமாக அஜித்  விஜய் – க்கு டஃப் கொடுத்து வருகிறார் அந்த வகையில் அஜித்தின் வீரம், ஜில்லா இரண்டு படங்களும் மோதியது.

இதில் ஜில்லா படத்தை விட வசூல் ரீதியாக வீரம் வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து துணிவு, வாரிசு படம் கடந்த பொங்கலுக்கு மோதியது இதில் இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது. அடுத்து அஜித் – விஜய் மோதுவதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் விஜய் துணிவு படத்தை தொடர்ந்து தற்பொழுதுதான் விடாமுயற்சி படத்தில் நடிக்கவே போகிறார். விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டு தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இந்த நிலையில் அஜித் – விஜய் மீண்டும் ஒருமுறை மோதிக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அஜித்தின் துணிவு திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விடாமுயற்சி உருவாக உள்ளது. வருகின்ற அக்டோபர் 4 தேதி சூட்டிங் நடக்கப்படும் என தெரிய வருகிறது. பெரும்பாலான காட்சிகள் அபுதாபி, துபாயில் தான் எடுக்கப்பட இருக்கின்றன.

படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வெங்கட் பிரபு, விஜய் இணையும் தளபதி 68 படத்தின் சூட்டிங்  அக்டோபர் 03 தேதி தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் தளபதி 68 மற்றும் விடாமுயற்சி ஒரே நாளில் மோதிக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டியில் ஒரு பேச்சு கிளம்பி உள்ளது.