ஆறு வருடமாக நயன்தாராவை காதலித்து போதும் – விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு.? அடுத்த பிளான் இதுதான்.. அதிர்ச்சியில் லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

nayanthara-
nayanthara-

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவதோடு மட்டுமல்லாமல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது இருந்து வருகிறார்.

டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வந்த நயன்தாரா தற்போது அதையும் தாண்டி முக்கியத்துவம் உள்ள படங்களில் சோலோவாகவும் மற்றும் டாப் லெவல் நடிகர்கள் படங்களில் கைகோர்த்து உள்ளதால் அவரின் வரவேற்பு இன்னும் சிறப்பாக இருந்து வருகிறது.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல் நெற்றிக்கண் அண்ணாத்த போன்ற பல்வேறு திரைப்படங்களில் கைவசம் வைத்துள்ளார். இதைத்தவிர தற்போது பல்வேறு சிறப்பான படங்களை தயாரித்து வருகிறார். இதனால் அவரது சொத்து மதிப்பு அதிகரித்து அடித்துக் கொண்டே செல்கிறது.

இவர்தான் இப்படி என்றால் அவரது காதலன் விக்னேஷ் சிவனுக்கும் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அடையாளத்தையும் தாண்டி பாடலையும் பாடுவதால் நல்லதோர் இடத்தையும்  தன்வசப்படுத்தி உள்ளார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் ஆனால் இவர்கள் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்து வந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனை சமூக வலைதள பக்கத்தில் தொடர்பு கொண்டு நீங்கள் இதுவரை நயன்தாராவை காதலித்து வந்தீர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள ரொம்ப செலவு ஆகும் அதனால் அதற்கான பணத்தை சேர்த்து விட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.

இச்செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் முதலிடத்தில் உள்ளது அந்த அளவுக்கு தற்போது தீயாய் பரவி வருகிறது.