சத்யராஜ் நடிப்பில் 2005ஆம் ஆண்டு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் இங்கிலீஷ்காரன், இந்த திரைப்படத்தில் சத்யராஜுடன் இணைந்து வடிவேலு, நமிதா, மதுமிதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தில் நமீதாவின் தங்கையாக நடித்திருந்தவர் மதுமிதா, இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் சண்டடே சண்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், தமிழில் இவர் குடைக்குள் மழை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து அமுதே, இங்கிலீஷ்காரன் நாளை , அனைவர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் கடைசியாக தமிழில் 2013ஆம் ஆண்டு பிரியாணி என்ற திரைப்படத்தில் வரலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான மதுமிதா தற்பொழுது கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார், ஒரு காலகட்டத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த சிவ பாலாஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவரின் கணவர் சிவ பாலாஜி தெலுங்கு பிக்பாஸில் வெற்றி பெற்று 50 லட்சத்தை கைப்பற்றியவர்.
இந்த நிலையில் மதுமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.