தமிழ் சினிமாவில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் எனிமி இந்த திரைப்படத்தை வினோத்குமார் அவர்கள்தான் தயாரித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ளார்கள்.
அதேபோல ஆர்யா மற்றும் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி மற்றும் மம்தா மோகன்தாஸ் நடித்த இத்திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் கதையை விட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று மிகவும் ஹிட்டாகி விட்டது.
அந்தவகையில் விசேஷத்தை முன்னிட்டு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற டம் டம் என்ற பாடல் ஆனது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது இவ்வாறு உருவான இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் அவர்கள் தான் எழுதியிருந்தார்.
இவ்வாறு இந்த பாடலுக்கு நடிகை மிர்ணாலினி நடனமாடுவது மட்டுமில்லாமல் இவருடன் சேர்ந்து பல பெண்கள் நடனமாடி இருப்பார்கள் அந்தவகையில் இந்த பாடலுக்கு டாட்டூ போட்டுக் கொண்டு நடனம் ஆடிய டான்ஸ்சர் ஒருவர் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.
ஏனெனில் இந்த பாடலில் கதாநாயகி நடனமாடுவதை விட பின்னணி நடனம் ஆடிய நடிகையின் இடுப்பில் இருக்கும் டாட்டூ பலரையும் கவர்ந்து விட்டது. இந்நிலையில் ரசிகர்கள் இவர் யார் என்று தெரிந்து கொள்ள இணையத்தில் வலைவீசி தேடிய நிலையில் இவருடைய பெயர் சந்திரா ஜோஷி என தெரியவந்தது.
அந்த வகையில் இது குறித்து அவர் பேசும்போது நான் இந்த அளவிற்கு பிரபலம் ஆவேன் என்பது எனக்கு கொஞ்சம் கூட தெரியாது தனக்கு 19 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது அதுமட்டுமில்லாமல் நான் நடனம் கற்று கொள்வதற்காகவே என்னுடைய கல்லூரி படிப்பை கூட நிறுத்தி விட்டேன் என அவர் கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.