வயதானாலும் கூட தொடர்ந்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்தப் படம் ஜெய்லர் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் எனவும் பட குழுவினர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் ரஜினி இந்த படத்தில் நடிகர் ரஜினியின் கேரக்டர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது அதாவது இந்த படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் வில்லன் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து மற்றொரு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் சிறப்பு இடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் படக்குழுவினர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் என மூன்று சூப்பர் ஸ்டார் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.
இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், விநாயகர், யோகி பாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.