தேர்தல் களம் : முடிந்த பிறகு தந்தையின் நிலைபாட்டை குறித்து பதிவிட்ட ஸ்ருதிஹாசன்.! வைரல் நியூஸ்.

தமிழ் திரை உலகில் நடிகராக இருந்து பின் படிப்படியாக தன்னை சினிமாவில் பிரபலப்படுத்தி கொண்டதோடு பன்முகத்தன்மை கொண்டவராகவும் மாறியவர் உலகநாயகன் கமலஹாசன்.

சமீப காலமாக சினிமா துறையில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்த உலகநாயகன் கமலஹாசன் அதற்கு மாறாக அரசியல் களம் புகுந்தார் இவர் மக்கள் நீதி மையம் கட்சி உருவாக்கியுள்ளார் இந்த கட்சியின் தலைவராகவும் இருக்கிறார் இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு பகுதியில் போட்டியிட்டார்.

1700 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் இவரை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். கமல் அவர்களுக்கு இது முதல் அரசியல் களம் இருந்தாலும் ஓரளவு மக்களை கவர்ந்த நபராக பார்க்கப்பட்டார். மேலும் வாக்குகளும் அதிக வாக்கு பெற்றிருந்தார் தோற்றாலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இந்தநிலையில் கமலஹாசன் தன்னுடைய  கருத்தை பதிவிட்டுள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சீரமைப்போம் தமிழகத்தை என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல அது “மக்கள் நீதி மய்யத்தின் கனவு”. மேலும் மண், மொழி, மக்கள் அனைவரையும் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் எனவும் கூறினார்.

இந்த நிலையில் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் கமலஹாசன் தோல்வி குறித்து அவரும் பதிவிட்டுள்ளார் அவர் கமலஹாசனின் புகைப்படத்தை வெளியிட்டு எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டார்.